வோடு ஒப்புமையின்றி ஒப்பாவன உவையெனக் கருதி மாற்றுவார்கள். என்று என்பது சொல்லெச்சம். ஒப்பலொப்பு இஃதென்பதனைத் தொல்காப்பியச் சொல்லதிகாரம் 74 ஆம் சூத்திரத்தா னறிக. (148) | சீரி யோர்பலி1 தேடி யோக்குமக் | | காரி யீதுணக் கடனன் றாலென | | ஆர வண்முதோ றகல வோப்புவார் | | ஈர மீனுணக் கேந்து கொங்கையார். |
(இ - ள்.) நெய்தனிலத்தின்கண் ஈரித்த மீனினை உணக்குகின்ற தலைநிமிர்ந்த முலைகளையுடைய பரத்தியர், பெரியோர்கள் சோற்றைத் தேடியழைத்துக் கொடுக்கும் அத்தகுதியுடைய காக்கைகள் (புலால்நாற்றம் பொருந்திய இம்மீனினை உண்ணல் முறையன்று என்று கருதி உண்ண அணுகுந்தோறும் சேய்மைக்கட்செல்ல ஓட்டுவர். (வி - ம்.) சீரியோர் - பெரியோர். பலி - காகப்பலியாகிய சோறு. தேடியோக்கல் - அழைத்துத் தருதல். காரி - காக்கை. அண்முதோறும் என்பது கடைக்குறைந்துநின்றது. ஈரமீன் - அப்பொழுது பிடித்துலர்ந்த ஈரித்த மீன். (149) | நீங்கு காதலர் நீண்ட தேர்வழி | | பாங்கின் மாதரார் பார்த்தங் காற்றுதல் | | தேங்கு நீர்க்கட றெரிந்து கட்பகை | | தூங்கி நீருகத் தூர்க்க முன்னுமே. |
(இ - ள்.) குறியிடத்துக் கூடிநீங்குகின்ற தலைவருடைய தேர் சென்ற நீண்ட வழியை அழகினையுடைய பெண்கள் கண்டு தம் மனத்தைத் தாமே யாற்றிக்கொள்ளுந் தன்மையை, நிறைந்த நீரோடுகூடிய கடலானது அறிந்து கண்ணாகிய பகை தாழ்ந்து நீரைச் சொரியும்வண்ணம் அவ்வழியை அழிக்கக் கருதும். (வி - ம்.) பாங்கு - அழகு. ஆற்றுதல் - தம் மனத்தைத் தாமே ஆற்றியிருத்தல். கட்பகை - கண்ணாகிய பகை. கண்ணுக்குக் கடலை உவமையாகக் கோடலின் கட்பகையென்றார். தூங்கி - தாழ்ந்து. (150) | துணைவ னீங்கினார் தொழுதிப் புள்ளொடும் | | அணையும் வண்லடாடு மலையு மீனொடும் | | புணரு மின்னலிற் புலம்பன் மேயினார் | | உணர்வித் தன்னவற் றுரைகொள் வாரென. |
(இ - ள்.) கூட்டமாகிய புள்ளினங்களோடும் (தங்கள் முகத்தை மலரெனக் கருதி யாண்டுப்) பொருந்திய வண்டினங்களோடும், (இரையைக் கருதி யாங்காங்கலைந்து திரிகின்ற) மீனினங்களோடும், தம் உயிர்த்துணைவராகிய தலைவரைப் பிரிந்த தலைவியர்கள் (அப்பிரிவு காரணமாகத்) தம்மை வந்தடைந்த துன்பத்தினின்றும் நீங்க (அத்துன்பத்தைப் பறவை வண்டு மீன் முதலியவைகளுக்கு) அறிவித்து (அத்துன் 1. | தேடியேர்க்கு, தேடியேற்கு என்பதும் பாடம். |
|