பக்கம் எண் :

திருநாட்டுப் படலம்81

பத்தை நீக்கும் வாயிலாக) அவைகள் கூறுகின்ற வார்த்தையை ஏற்றுக் கொள்பவர்களைப்போலப் புலம்புதலைப் பொருந்தினார்.

(வி - ம்.) தலைவரைப் பிரிந்த தலைவியர் கேளாதனவற்றைத் தம்மைப் புணர்ந்த துன்பங்காரணமாகக் கேட்பனவாக வைத்து இன்னலைக் கூறினாரென்க. இதனுள் 'கேட்குநபோலவும கிளக்குநபோலவும்' என்னும் நன்னூற் சூத்திரக் கருத்தமைந்திருத்தலை நோக்குக.

(151)

 சாத லன்னதோர் தளர்வு செய்தம
 நீதி காட்டிய நிகரில் பூங்கழைக்
 கோதை வார்சிலைக் குமரன் கூர்ங்கணை
 யாத னீலமங் கணிந்த நெய்தலே.

(இ - ள்.) இறத்தலுக்கொப்பாகிய இரங்கலும், இரங்கனிமித்த முமாகிய தளர்வைச் செய்து தம்முடைய நீதிகளைப் பிறர்க்கறிவிக்க ஒப்பில்லாத பொலிவுபெற்ற ஒழுங்கினையுடைய நீண்ட வில்லோடு கூடிய மன்மதனது கூர்மைபொருந்திய அம்பாதலுடைய நீலோற்பல மலரை. நெய்தனிலமான தணிந்தது.

(வி - ம்.) இரங்கலும், இரங்கனிமித்தமும் நெய்தற்குரிய பொருளாதலின், அதனைப் பிறர்க்கறிவிக்க மன்மதனம்பாதலுடைய நீலோற் பலத்தை நெய்தனிலமணிந்ததென்க. தம் + அ தம - ஆறாம் வேற்றுமை. காட்டிய - காட்ட. கோதை - ஒழுங்கு. கணையாதல்நீலம் - கணையாத லுடைய நீலமென்க. அணிந்ததென்னும் முற்றிறுதிதொக்கது.

(152)

 மன்னு நானில வரைப்பி னைந்திணை
 சொன்ன வாறினிச் சொற்ற நானில
 முன்னி யொன்றினோ டொன்று முற்றிய
 அன்ன நீர்மையு மறைய நின்றதே.

(இ - ள்.) (இதுகாறும்) நிலைபெற்ற குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தலாகிய நான்குவகையாகிய நிலத்தின்கணுள்ள ஐந்திணைவளத்தைச் சொல்லியவாறாகும். இனி மேலே கூறிய நான்குவகை நிலங்களும் கருதி ஒன்றனோடொன்று கலந்த அத்தன்மையாகிய (திணைமயங்குதலாகிய) குணத்தையுஞ் சொல்ல நின்றது.

(வி - ம்.) முற்றிய - கலந்த. நீர்மை - குணம்.

(153)

திணைமயக்கம்

வேறு

 வரைத்தி னைக்குர னுகர்கிளி கொல்லையின்
 வளரிறுங் கினுக்கேக
 நிரைத்த கொல்லையிற் சொன்னலூண் வாரண
 நெடும்புனத் தினைக்கேகிப்