| புரைத்த தாயினும் பெற்றது புல்லிதாப் | | பெறாததிற் புகலாமென் | | றுரைத்தநன் மொழி புதுக்குறும் விம்மித | | மோங்குவ தொருபாங்கர். |
(இ - ள்.) குறிஞ்சி நிலத்தின்கண் தினைக்கதிர்களை யுண்ணுகின்ற கிளிகள், முல்லைநிலத்தில் வளர்கின்ற சோளக்கதிரை யுண்ணச் செல்லா நிற்க, வரிசையாக அமைந்துள்ள முல்லைநிலத்தின்கண்ணுள்ள சோளத்தையுணவாகக் கொள்கின்ற கானங்கோழிகள், குறிஞ்சிநிலத்தின்கண்ணுள்ள தினைப்புனத்திற்குச் சென்று உயர்ந்த பொருளாக இருப்பினும் தானடைந்த பொருளை இழிந்த பொருளாகக் கருதித் தானடையாத பொருள்களில் விருப்பமதிகமாகுமென்று ஆன்றோர்கள் கூறிய நல்ல முதுமொழியைப் புதிதாகச் செய்கின்ற வியப்புயர்வது ஒரு பக்கத்துளவாகும். (வி - ம்.) இறுங்கு - சோளம். சொன்னல் - சோளம்; திசைச் சொல். வாரணம் - கானங்கோழி. புரைத்தது - உயர்ந்தது. புகல் - விருப்பம். பெறாதது - பெறாததாகிய பொருள். வினையாலணையும் பெயர். 'உரைத்த நன்மொழி' பெற்றது சிறிது பெறாததிற் பெரிது பண்ணும், உற்ற ஆணவத்தின் செய்கை' எனவும், 'அரிது பெற்றிடினும் பெற்றதில் விருப்பமறாது' எனவும் ஆன்றோர்கள் கூறிய முது மொழி. (154) | மல்லன் மந்திரந் தளைத்தென முழைதொறு | | மணிப்பணி யசைவற்று | | முல்லைத் தீங்குழ னுகர்தர மானமா | | முதிர்புதன் மயிர்யாப்பச் | | செல்லுறாதவ ணிற்றல்போற் றினையுணச் | | செல்லுறு பதநோக்கிப் | | பல்லி ணர்க்கொடி மாதவி நறுநிழற் | | பயில்வது முளதாங்கண். |
(இ - ள்.) (ஓதுபவர்களுக்கு எல்லா) வளங்களையும் கொடுக்கின்ற மந்திரவலியாற் கட்டுண்டதென்று சொல்லும்வண்ணம் மலைக்குகை தோறும் மணிகளையுடைய பாம்பினங்கள் அசையாதுகிடந்து முல்லைநிலத்துள்ள ஆயர்களூதுகின்ற புல்லாங்குழலினிசையைச் செவியாற்பருக (முல்லைநிலத்தின்கண்ணுள்ள) கவரிமான்கள், முதிர்ந்த புதர்களில் மயிர் சிக்கிக்கொள்ளச் செல்லாதாண்டுநிற்றலைப்போல (குறிஞ்சி நிலத்தின்கணுள்ள) தினையை யருந்தச் செல்லுகின்ற காலத்தைக் கருதிப் பலவாகிய பூங்கொத்துக்களையுடைய கொடியோடுகூடிய குருக்கத்தியின் நல்ல நிழலின்கண் தங்குவதும் அவ்விடத்துள்ளது. (வி - ம்.) மல்லல் - வளப்பம். 'மல்லல்வளனே' என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தா னறிக. தளைத்தல் - கட்டுதல். குழல் - குழலிசையை யுணர்த்தலின் ஆகுபெயர்; மானமா - கவரிமா. பதம் - காலம். |