| | கொள்ளி வட்டமும் பிற்படக் கொட்புறுந் திறலோர் | | | அள்ளி விட்டபல் சரங்களு நிமிருமிவ் வகிலம் | | | முள்ளெ யிற்றரா வினமொன்று நாடுபு முடுகித் | | | தெள்ளி திற்றிரி வுறினந்தப் பணிப்பதி சிவனும். |
(இ - ள்.) கொள்ளிக் கட்டையினைச் சுற்றுதலானுளதாகும் வடிவமும் பின்னிடச் சுழலுந் தன்மையுடையா ரிருவரும் அம்புக் கூட்டினின்றும் அள்ளிவிட்ட பலகணைகளும் நிமிர்ந்துள்ள விவ்வகிலமானது முள்ளினைப் போன்ற கூரிய பற்களையுடைய பாப்பினங்கள் ஒரு பொருளை நாடி விரைந்து தெளிவாகத் திரிதரி னத்தன்மையாகிய நாகலோகத்தினை யொக்குமென்க. (வி - ம்.) இவ்விருவருந் தோன்றி மறைதலொருவரானு முணர்த லருமையென்பார், "கொள்ளி வட்டமும் பிற்படக் கொட்புறுந்திறலோர்" என்றார். பலசரங்களு நிறைந்த இவ்வுலகமானது பல பாப்பினங்கள் விரைந்து ஒரு பொருளை நாடித் தெளிவாகத் திரிவுறி னத்தன்மையாகிய பணிப் பகுதியை யொக்குமென வினைமுடிவு செய்க. (439) | | கட்பு லன்கது வாக்கடு விசைகொடு கறங்கின் | | | விட்பு லத்தல மருமமை யத்துவெந் திறலோன் | | | ஒட்ப மிக்கவன் றேரினை யுடைத்தன னுகுமுன் | | | மட்பு லத்தவன் றேருக மறித்தனன் வீரன். |
(இ - ள்.) கண்ணறிவினாற் பற்றப்படாத மிக்க வேகத்தான் காற்றாடியினைப்போல விண்ணிடத்து இருவரும் சுழலுகின்ற காலத்துக் கொடிய வலியினையுடைய பானுகோபன் அறிவின் மிக்கோனாகிய வாகு வின்றேரினையுடைத்தனன். அத்தேருடைந்து கீழ் வீழ்வதன் முன்னர் வீரவாகு மண்ணினிடத்து அவன்றேருகும்படி மடித்தனனென்க. (வி - ம்.) கட்புலன் - கண்ணறிவு. கறங்கு - காற்றாடி. மட்புலம் - நிலம். ஒட்பம் - அறிவு. "உலகந்தழீஇய தொட்பம்" என்னும் திருக்குறளா னறிக.(440) | | உரத்திற் பல்சர மழுத்தின னும்பர்தம் பகைஞன் | | | சிரத்து மோலியைச் சிதர்த்தனன் றேவர்நட் பாளன் | | | புரத்துச் சாலிகை கீழ்ந்தனன் புலவரை யலைத்தோன் | | | கரத்துக் கார்முகந் துமித்தனன் கடவுளர்க் காத்தோன். |
(இ - ள்.) வாகுப் பெயரோன் மார்பின்கண் தேவர் பகைவனாகிய பானுகோபன் பலகணைகளைச் செலுத்தினன். தேவர்கள் நட்பாளனாகிய வாகுப் பெயரோன் தலையின்கண்ணுள்ள முடியினைத் தகர்த்தான். அறிவின்மிக்க தேவர்களை வருத்தினவனாகிய பானுகோபன் வாகுவின் உடம்பின்கண் ணுள்ள கவசத்தைப் பிளந்தனனென்க. தேவர்களைக் காத்தல் செய்தோனாகிய வாகு பானுகோபன் கையின்கண்ணுள்ள வில்லினை யொடித்தனனென்க. (வி - ம்.) உரம் - மார்பு. மோலி - முடிக்கலன். தேவர் நட்பாளன் - வீரவாகு. புலவர் - தேவர். கடவுளர் - தேவர். (441) |