பக்கம் எண் :

சீபரிபூரண நாமப் படலம்805

(இ - ள்.) இங்ஙனம் நிலத்தின்கண் வீழ்ந்த வீரனாகிய பானுகோபனைப் பூதவீரர்கள் நெருங்கி வீரத்திருவாழ்ந்திருந்த, முழந்தாளளவு தாழ்ந்த கையினைக்கண்ணுற்று மருட்கையென்னும் மெய்ப்பாட்டுடனே வியந்து பானுகோபனைப் பிளந்த வாளினைக் கையிற்கொண்டு வீசியாடி அவன்செய்த போரினைப் புகழ்ந்து ஆழமாகிய எழுகடலுமுடைந்தாற் போல முழக்கஞ் செய்தனரென்க.

(வி - ம்.) மூன்றாமடி. திணை : தும்பை. துறை : ஒள்வாளமலை. (முன்னடி புறத்திணைஇயல் பார்க்க) நெருங்கினர், நோக்கினர், வியந்தார், ஆடினர் :
எச்சமுற்றுக்கள்.

(448)

 வாகை பன்முறை சூடிய வயவர்க டலைவன்
 ஓகை கொண்டன னுரைத்தவஞ் சினமின்று முடித்தாம்
 ஏகு வாமினி யிறைவன்மாட் டென்றன னன்றே
 ஆக லென்றன ரனைவருந் திரண்டனர் பெயர்ந்தார்.

(இ - ள்.) சென்ற போர்களிற் பன்முறையும் வாகைமாலையைச் சூடிய வீரர்கள் தலைவனாகிய வாகுப பெயரவன் உவகைகொண்டு சொற்றவஞ்சினத்தை யாமின்று முடித்தோம். இனி இறைவன்பக்கலிற் செல்வாமென்றனன். ஆண்டுள்ளவரனைவரும் அவ்வாறே ஆகுகவென்றனர்; யாவரும் அப்பறந்தலையினின்றும் பெயர்ந்தன ரென்க.

(வி - ம்.) வாகை - வெற்றிமாலை. ஓகை - உவகை.

(449)

 அழுக்கில் வீரர்தே ரகறலு மாவயி னெங்கும்
 வழுக்கு வெண்ணிணம் வாய்மடுத் திரத்தநீர் பருகி
 ஒழுக்கு வார்குடர் மாலைவேய்ந் துலப்பில்பேய்ப் பெண்டிர்
 முழுக்க வண்புகழ் பாடினர் முயன்றனர் குரவை.

(இ - ள்.) குற்றமில்லாத வீரர்கள் தேர் அவ்விடத்தினின்று நீங்கப் பறந்தலையெங்கணும் பரந்துகிடந்த வழுக்குதலையுடைய வெண் டடியினையுண்டு, புண்ணீரைப் பருகிக் கீழே சரிந்துவீழ்ந்த நீண்ட குடராகிய மாலையினை யணிந்து, அளவிலராகிய பேய்மகளிர் வாகுப் பெயரவன் புகழ்முழுவதும்பாடிக் குரவைக் கூத்தையாடினரென்க.

(வி - ம்.) வேய்ந்து - சூடி. பேய்ப்பெண்டிர் - பெண்பேய். இது திணை, தும்பை; துறை : பேய்க்குரவை.

(450)

 இருந்த பூமக டவ்வையைக் காட்டியே குதல்போல்
 வருந்த மாநகர் பெயர்ந்தருள் வாகுபோய் முருகன்
 திருந்து சேவடி பணிந்தனன் சேயுள மகிழ்ந்து
 பொருந்து நல்வரங் கொள்கெனப் புகழ்ந்துபோர் வீரன்.

(இ - ள்.) ஆண்டு நிலைபெற்றிருந்த திருமகள் தன்மூத்தாளுக்கு அவ்விடத்தைக் காட்டி நீங்கல்போலப் பெரிய நகரம் வருந்த ஆண்டு நின்றும் நீங்கிய வாகுப் பெயரவன் சென்று யாவரும் வழிபட்டுத் திருந்துதற்கேதுவாகிய குமரப்புத்தேள் சேவடியினை வணங்கினன்.