| அவன் மனம் உவப்புற்று உனக்குத் தகும் நல்லவரங்களைக் கொள்வாயாக வெனப் பணிந்தருளப் புகழ்ந்து வாகுப்பெயரோன். (வி - ம்.) பூமகள் - திருமகள். தவ்வை - முகடி. உயிர்கள் திருந்துதற்குக் காரணமான சேவடி என்க. சேய் - முருகன். (451) | | ஆர ணத்தனு நகரமே லடுத்தவா ரணனும் | | | வார ணத்தனு மற்றுள கணங்களும் மணியும் | | | ஏர ணத்தகு முதன்மையி லிருத்தினை யினிநின் | | | பூர ணத்திரண் டறக்கலப் பதுதரப் புகறி. |
(இ - ள்.) வேதத்தையறிந்தவனாகிய பிரமனும், நகரவொற்றின் மேற் பொருந்திய ஆரணனாகிய நாரணனும், வெள்ளையானையுடைய இந்திரனும், வேறுள்ளனவாகிய கணங்களும் வணங்கும் பெருமை அண்மத்தக்க முதன்மையிலிருக்கச் செய்துள்ளனை. இனி உனது நிறைவில் அத்துவிதமாகக் கலத்தலைச் செவியறிவுறுப்ப விரும்புவாய். (வி - ம்.) ஆரணம் - மறை; நகரமெய்யின் மேலடுத்த ஆரணன் ந் + ஆரணன் - நாரணன் ; திருமால். (452) | | என்று வேண்டின னளித்தன மெனவிறை நவின்று | | | நின்ற வீரர்க டமக்கெலா நெடிதரு ளுதவி | | | ஒன்ற வவ்வவ ரிடங்களிற் செல்கென வுறுத்தான் | | | வென்றி வீரர்க ளனைவரும் மெலிவொரீஇ யிருந்தார். |
(இ - ள்.) என்று குறையிரந்து வேண்டினன். அங்ஙனம் வேண்ட இறைவன் அளித்தோம் என்று திருவாய்மலர்ந்தருளி ஆண்டுநின்று ஏனைய வீரர்களுக்கெல்லாம் மிக்கவருளினைச் செய்து அவ்வவர் தங்கும் பாடிவீட்டின்கட் செல்லக்கடவீர்களெனக் கட்டளையிட்டனன். வென்றியினையுடைய வீரர்கள்யாவரும் போரானுளவாகிய மெலிவுநீங்கி யிருந்தனரென்க. (வி - ம்.) இறை - முருகன். ஓரீஇ - ஒருவி; நீங்கி. (453) வேறு | | நந்தாத வாண்மைக்கு நாயகமா மைந்தனுருச் | | | சிந்தாக் கிடந்தா னெனச்சிலர்போய்ச் செப்புதலும் | | | அந்தோ வெனச்சூர னாவி முழுதழிந்து | | | நொந்தா னழுதா னுவன்றான் பலநினைந்தான். |
(இ - ள்.) ஈண்டிவ்வாறாகச் சூரன்கெடாத வாண்டகைமைக்கு நாயகமாகிய மகன்வடிவஞ் சிதறுற்றுக் கிடந்தனனென்று அறிந்த சிலர் போய்ச் சொல்ல ஐயோவென்று உயிர்முழுது மழிந்து நொந்து அழுதனன். பலப்பல வார்த்தைகளைச் சொல்லி எண்ணாத வெண்ணமெல்லாம் எண்ணினனென்க. |