| (வி - ம்.) நந்தாத - கெடாத. சிந்தா - சிந்தி. நொந்தான், அழுதான், நுவன்றான் - எச்சமுற்றுக்கள். (454) | | கோயில் விலாவம் பணையா லொளிகுறையப் | | | பாய நகருந்தன் பாடழிய வெவ்வயினும் | | | பேயு நரியும் பிணமு முடற்குறையும் | | | தாய குருகின் றமரிப்பு மிக்கதே. |
(இ - ள்.) சூரனுறையுள் அழுகையாகிய வாத்தியத்தான் ஒளி குன்ற எண்டிக்கினுந் தன் புகழ் பரந்த நகரமுந் தன் பெருமைகெட, எல்லாவிடங்களிலும் பேய்களும், நரிகளும், பிணங்களும், உடற்குறையும் பிணங்களை யுண்ணத் தாவிய புட்களின் முழக்கமு மிக்க தென்க. (வி - ம்.) மிக்கதென்னுஞ்சொல் பேய்முதல் தமரிப்பு என்னுஞ் சொல்லிறுதியாகிய சொல்லோடு தனித்தனி சென்றியைந்துநின்றது. விலாவம் - அழுகை. இதனை "மிகைநலத் தேவிதானே விலாவணை நீக்கினாளே" என்னுஞ் சிந்தாமணி மண்மகளிலம்பகச் செய்யுளடியானுணர்க. (455) | | தேவர்சிறை செய்த திறலோன்ம னிந்திரன்முன் | | | மூவரு மஞ்சு முதல்வன்மன் வெள்ளணிநாள் | | | மேவிக் கதிரை வெகுண்டயனார் வந்திரந்த | | | காவலன்ம னென்றவுணர் காவலன்மா ழாந்தளவில். |
(இ - ள்.) இப் பானுகோபன் இந்திரனுக்கு முன்னர்த் தேவர்களைச் சிறைப்படுத்திய வலியினையுடையான்; அவ்வலி யிதுபொழுது கழிந்தது. பிரமன் ; விண்டு, உருத்திரன் ஆகிய மூவரும் அஞ்சுதற்கேதுவாகிய முதல்வன் : அம்முதன்மை யிதுபொழுது கழிந்தது. வெள்ளணிநாளின் வெங்கதிர்க் கடவுளைப்பொருந்திச் சினந்து அச்சினம் நீங்கிப் பிரமன்வந்து இரத்தற்கேதுவாகிய தலைவனாவான் ; அத்தலைமை யிதுபொழுது கழிந்த தென்று அவுணர்கள் தலைவனாகிய சூரன் மயங்கியபொழுது என்க. (வி - ம்.) இதுதிணை : காஞ்சி. துறை : மன்னைக்காஞ்சி. வெள்ளணி - பிறந்தநாளிற் செய்யுமொப்பனை; இதனை "வெள்ளணி யணிந்த ஞான்றே வேந்தர்தம் முடியிற் கொண்ட" சீவகசிந்தாமணி காந்தருவதத்தையா ரிலம்பகச் செய்யுளடியானு முரையானுமுணர்க. (456) | | துண்டப் படுமுறுப்புச் சோரா தெடுத்திரதம் | | | கொண்டங் குறுப்பக் குமரன் றனைக்குறுகிப் | | | புண்டங் குடலுமரப் பொந்தனைய நெஞ்சகமும் | | | கண்டங் கிளைந்திதனைக் காமி னெனக்கிளந்தான். |
(இ - ள்.) பானுகோபனது துண்டமாகிப் பொருந்திய உறுப்பினைச் சோர்வில்லாமற் போர்க்களத்தினின்று மெடுத்துத் தேரிற் கொண்டுவந்து சேர்ப்ப, குமரனைச்சூரன் அண்மிப் புண்டங்கிய வுடலினையும் |