பக்கம் எண் :

810தணிகைப் புராணம்

 வீக்கிவம் பணிகள் சால மெய்ப்படுத் திணர்த்த தும்பைப்
 பூக்குரு முடிக்கண் வேய்ந்து போர்த்திருக் கோலங் கொண்டான்.

(இ - ள்.) இனி யாம் இவ்வுலகின்கண் ணிருக்கும் பாக்கியமில்லை யென்றுகருதி எல்லாப்பொருள்களுந் தங்கிய தன் பெரியமனையின்கட் சென்று உணவுக்குரிய பொருள்களையெல்லாம் பொலிவுறவுண்டு வயிற்றினை நிறையச்செய்து புதிய அணிகலன்களை உடலின்கண்ணணிந்து கொத்தினையுடைத்தாகிய நிறம்பொருந்திய தும்பைமலரினை வெற்றிகருதி முடியின்கட்சூடிப் போரினுக்குரிய அழகிய கோலத்தினைக் கொண்டனனென்க.

          (வி - ம்.) பாக்கியம் - தெய்வம். "பலர்கொள்வர் பாக்கியத்தால்" என்னுந் திருக்குறளா னுணர்க. அலரறிவுறுத்தல் (1). கைதொடல்- உண்ணல். மோடு - வயிறு. "மோடு மேடுதரம்" என்னும் நிகண்டானறிக. வீக்கல் - ஈண்டு நிறையச் செய்தல். வம்பு - புதுமை. மெய்ப்படுத்தல் - மெய்யின்கண்ணணிதல். குரு - நிறம். "குருவுங்கெழுவு நிறனா கும்மே" என்பது ஓத்தாகலின் 'தொல் - உரி - இயல்.)

(463)

 பற்பல படைகைக் கொண்டு படர்பெரு மணித்தே ரூர்ந்து
 விற்பயில் கவிகைக் காடும் விண்டுழாம் பதாகைக் காடும்
 எற்பயில் கவரிக் காடு மீண்டப்பல் லியமி யம்பச்
 சொற்படு சேனை வெள்ளஞ் சூழ்தரப் பெயர்ந்து போந்தான்.

(இ - ள்.) பலப்பல படைக்கலங்களையும் கையின்கட் பற்றி விரைந்த செலவினையுடைய பெரியமணிகள் கட்டிய தேரினைச் செலுத்தி, ஒளிதங்கிய குடைகளின் கூட்டமும், வானைத்துழாவுகின்ற கொடிகளின் கூட்டமும், ஒளிதங்கிய கவரியின் கூட்டங்களும் நெருங்கப் பலவாத்தியங்களும் ஒலிக்கப் போர்தோறும் வென்றியைப் பெறுதலான் புகழமைந்த எண்ணிறந்த படைகள் சுற்றத் தன்னகரினின்றும் நீங்கிச் சென்றனன்.

          (வி - ம்.) வில் - ஒளி. காடு ஈண்டுக்கூட்டம். எல் - ஒளி. "எல்லே விளக்கம்" என்பது ஓத்தாகலின் (தொல்- சொ. இடை - சூ. 7) வெள்ளம் - மிகுதி : இனி வெள்ளமென்னும் ஓரெண்ணுமாம். இதனை "ஐயம் பல்லென வரூஉம்" என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தா னுணர்க. (தொல்- எழுத்து. சூ.)

(464)

 மாடகத் திவவு நல்யாழ் மாமுனி குமரற் றாழா
 ஆடக வரைபோ னீண்ட வரிமுகன் போர்க்குப் போந்தான்
 நாடக மவன்போ ராக்கி நலிதரு மமரர் தாளில்
 பாடக நிகளஞ் சீத்துப் பாணியா தருள்க வென்றான்.

(இ - ள்.) யாழுறுப்பினோடியைந்த நரம்பினையுடைய நல்ல யாழினைத் தவத்தாற் பெரிய நாரதமுனி்வன் குமரப்பெருமானை வணங்கி, அடிகேள் ! பொன்மலை போன்று நீண்ட மெய்யினையுடைய சிங்கமுகன் போருக்குப் போந்தனன். அவனியற்றும் போரினை அடிகள் நாடகமாகச் செய்து (அவனாலும் அவன் முன்னோனாலும் பல்லூழி