| ரென்பது போதரும். இனி யொரு சாரார் "உய்வகை யுறக்கங் கொண்டா" ரென்பதற்கு உய்தற்குப் பொய்யுறக்கங் கொண்டா ரெனவுங் கூறுவர். அங்ஙனங் கூறல் வீரர் இலக்கணத்திற்கு மாறுகோடலான் பொருத்த மின்றென விடுக்க. கை - படை. இதனை "கைபடை" யென்னும் நிகண்டானுணர்க. குஞ்சி - ஆண்மயிர். (467) | | பூதர்க ளிரியத் தாக்கிப் பொங்கிய வவுணர் சேனை | | | மீதுறக் கண்ட சிங்கன் வெய்தொரு தண்ட மேந்தி | | | மோதுபு சிரங்க டோள்கண் முரிந்துக வுழக்குங் காலைச் | | | சாதனிற் களித்தே னென்று தசமுகத் தவுண னேற்றான். |
(இ - ள்.) பூதப்படைகள் வெந்நிட்டோடும்வண்ணம் மோதிக் கிளர்ச்சியுற்ற தானவர் படை தன்மீது வரக்கண்ட சிங்கனென்பவன் விரைந்து ஒரு தண்டத்தினைத் தாங்கி மோதித் தலைகளும், தோள்களும் கெட்டு கீழே விழும்வண்ணம் கலக்குஞான்று சாதற்றொழிலை நினக்கிப்பொழுதே தந்தேனென்று பத்து முகங்களையுடைய தானவனொருவன் வந்தெதிர்ந்தான். (வி - ம்.) வெய்து - விரைந்து. சாதல் இரண்டாவதன் றொகை. நிற்கு - உனக்கு. தசம் - பத்து. (468) வேறு | | விடுசரந் தண்டினால் விலக்கிப் பாய்ந்தவன் | | | தொடுகவ யந்தபத் துளங்க வோச்சினான் | | | நெடுமொழிச் சிங்கனந் நேர லானொரு | | | கடுமுரட் டண்டமேற் கடவி யார்த்தனன். |
(இ - ள்.) பகைவர்மாட்டு அஞ்சாது கூறும்தன் மேம்பாட் டுரையையுடைய சிங்கனென்பவன் தசமுகன்விட்ட கணைகளைத் தண்டத்தினால் விலக்கி அவன்மேற் பாய்ந்து அணிந்திருந்த மெய்ப்பை கெட நடுங்கும்படி யடித்தனன். பகைவனாகிய தசமுகன் ஒப்பற்ற மிக்கவலி யினையுடைய தண்டமொன்றினைச் சிங்கன்மேற் செலுத்தி வீரமுழக்கஞ் செய்தா னென்க. (வி - ம்.) கவயம் - உடம்புக்கீடு. தப - கெட. ஓச்சல் - அடித்தல். கடுமுரண் - மிக்கவலி. (469) | | மருமமுற் றக்கதை மறிந்து வீழ்ந்தது | | | குருதியுண் கணிச்சியைக் கொள்ள வேயினான் | | | கரதலத் தண்டினாற் கணிச்சி சிந்திப்போய்ப் | | | பொருசிலை தகர்த்தனன் பூத நாயகன். |
(இ - ள்.) அவன் கடவிய அத்தண்டம் சிங்கன் நெஞ்சின்கட்பட்டுக் கெட்டுக் கீழே வீழந்தது. அக்கணமே தசமுகன் குருதியையுண்ணும் |