| மழுப்படையைச் சிங்கனுயிரைக் கொள்ளும்வண்ணம் செலுத்தினான். பூதநாயகனாகிய சிங்கன் தன் கையின்கண்ணிருந்த தண்டத்தினால் மழுப்படையைக் கெடுத்து அவனையண்மிப் போர் செய்தற்குரிய வில்லினையும் ஒடித்தனன். (வி - ம்.) கணிச்சி - மழுப்படை. பூதநாயகன் சிந்தித் தகர்த்தன னென்க. (470) | | தானவன் வேல்விடச் சக்க ரத்தினான் | | | மானவ னழித்தனன் வார்ந்த தண்டவன் | | | கானுரத் திட்டனன் கலங்கிச் சிங்கன்கை | | | யானிறத் தெற்றின னவுணன் றுஞ்சினான். |
(இ - ள்.) சிங்கன் வில்லைத் தகர்த்தவுடன் தசமுகனென்பான் வேற்படையைச் செலுத்தப் பெருமைபொருந்திய சிங்கன் ஆழிப்படையான் அவ்வேற்படையைக் கெடுத்தனன். நேரிய தண்ட மொன்றினைச் சிங்கன் வாசனையோடு கூடிய மாலையணிந்த மார்பின்கண்ணே விடுத்தனன். அங்ஙனம்விடச் சிங்கனென்பான் கலக்கமுற்றுத் தன் கைகளால் தசமுகன் மார்பின்கண் அறைந்தனன். அவுணனாகிய தசமுகனிறந்தான். (வி - ம்.) உரம் - மார்பு. கான் - வாசனை. அஃதாகுபெயராய் மாலைக்காயிற்று. நிறம் - மார்பு. சிங்கன் கலங்கிக் கையாலெறிந்தனன் அவுணன்றுஞ்சினனென வினைமுடிபு செய்க. (471) வேறு | | படைக்கு நாயகன் வீழ்தலு | | | மவுணர்கள் பாரிடர் தனிவீரம் | | | உடைக்க நேர்ந்தன ரிலக்கரு | | | ளனகனென் றுரைப்பவன் சிலைவாங்கித் | | | தொடைக்க னந்தவா ளிகள்படுத் | | | துழக்கினன் சோரிவெண் ணிணம்வௌவி | | | நடக்க லுற்றது துன்முக |
னென்பவ னச்சர வெனக்கண்டான்.(இ - ள்.) படைத்தலைவர்கள் வீழ அவுணர்களைப் பூதர்கள் ஒப்பற்ற வீரத்தினைக் கெடுக்கப் பொருந்தினர். அஞ்ஞான்று இலக்க வீரருள் வைத்து அனகனென்று எல்லாரானுஞ் சிறப்பித்துச் சொல்லப்படுமவன் வில்லினை வளைத்து ஒவ்வொரு தொடுப்புக்குப் பலவாளிகளைக் கோத்துக் கலக்கினான். அங்ஙனங் கலக்கியதா னுளவாகிய புண்ணீரானது வெள்ளிய தசைகளை ஈர்த்துக்கொண்டு செல்லத் தொடங்கியது. அங்ஙனம் நடத்தலை நஞ்சினையுடைய அரவினையொத்த துன்முகனென்னும் அவுணர் தலைவன் கண்ணுற்றனன். (வி - ம்.) தொடை - தொடுத்தல். அனந்தம் - எண்ணிறந்த. (472) |