| | நூறு நூறுரு வொவ்வொரு | | | பூதர்க்கு நொடிக்குமு னெடுத்துற்றுப் | | | பாறு தாழ்சிலை வணக்கினன் | | | சிலைத்தொழில் பயிற்றின னதுகண்டு | | | சீறும் வீரமார்த் தாண்டன்சே | | | தனப்படை செலுத்தினன் றனிநின்று | | | கூறு துன்முகன் சரமழை | | | பொழந்தனன் கோணையா னவைமாற்றி. |
(இ - ள்.) அங்ஙனங் கண்ட துன்முகனென்பான் (இறைவன் படையாகிய) ஒவ்வொரு பூதர்களுக்கு முன்ன (தன் மாயையால்) நொடித்தற் பொழுதளவிற்கு முன்னர் நூறு நூறு வடிவினைக்கொண்டு பொருந்திப் (புலால் நாற்றங்கருதி) பருந்துவந்து தங்குஞ் சிலையினை வளைத்தானாகி (வில்லில் அம்புகளைத் தொடுக்குஞ்) செயலைச் செய்தனன். அங்ஙனமவன் அம்பு தொடுத்தலைக் கண்டு சீறுதலைக்கொண்ட வீரமார்த்தாண்ட னென்பான் பேரறிவை யுளவாக்கும் படையொன்றினைச் செலுத்தினன். (யாவரும் புகழ்ந்துகூறுந் துன்முகனென்பான் அம்பு மழையைச் சொரிந்தனன்). வலியுடையனாகிய வீரமார்த்தாண்டன் அவ்வம்பு மழையை நீக்கி. (வி - ம்.) பாறு - பருந்து. சேதனம் - அறிவு. கோணையான் - வலியுடையான். (473) வேறு | | வாளி யேழனால் வார்சிலை துணித்துவான் கவயம் | | | வாளி யொன்றனான் மாற்றிமாற் றலனுட லெல்லாம் | | | வாளி யெண்ணில துறுத்தனன் மயங்கிவீழ்ந் தெழுந்து | | | வாளி லாதவன் மாயையா னுருமறைந் தகன்றான். |
(இ - ள்.) வீரமார்த்தாண்டன் ஏழ் அம்புகளான் துன்முகன் வில்லினைத் தடிந்து ஓரம்பினால் மேலாகிய அவனுடம்புக் கீட்டினை நீக்கி அப்பகைவன் உடலெங்கணும் அளவில்லாத அம்புகளைச் செறித்தனன். அங்ஙனஞ் செறித்தவளவில் ஒளியிலனாகிய துன்முகன் மயங்குதலுற்றுக் கீழே வீழ்ந்தெழுந்து மாயையின் வடிவைக் கரந்து நீங்கினன். (வி - ம்.) கவயம் - உடம்புக்கீடு. வாள் - ஒளி. இதனை "வாளொளி யாகும்" என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தா னறிக. (474) | | தலைவர் பட்டதுந் தன்படைக் கேட்டையுங் காணாக் | | | கொலைமு கத்தவெங் கூற்றென வரிமுகன் குறுகி | | | மலைம ரம்படை பூதர்கள் வழங்கின நாசி | | | உலவை பட்டுமிக் குடைவன திரிவன வுயிர்த்தான். |
|