| (இ - ள்.) சிங்கமுக னென்பான் தன் சேனைத்தலைவர்க ளிறந்த தனையும், படையழிந்ததனையுங் கண்டு கொல்லுந் தொழிலைத் தன்னிடத்தே யுடைய (உடலையும் உயிரையும்) கூறுசெய்பவனாகிய தென்றிசைக்கோனைப் போல அணுகிப் பூதர்கள் விட்டனவாகிய, மலை, மரம், அம்பு முதலியவைகள் தன் மூக்கினின்றும் புறப்படுங் காற்றான் மோதப் பட்டு மிகவு முடைவுற்றுச் சுழலும்படி பெருமூச் செறிந்தான். (வி - ம்.) சிங்கனொருவன் பூதர்களால் மலை, மரம் முதலாக வழங்கப்பட்டன யாவும் தன் மூக்கின் காற்றுப்பட் டுடைவனவாகவும், திரிவனவாகவும் உயிர்த்தா னென்க. உலவை - காற்று. (475) | | விம்மி தத்தராய் மேலும்போர் மலைத்தெழு பூதர் | | | தம்மை வன்கையாற் சேர்த்தனன் றகர்த்தனன் றுகைத்தான் | | | அம்ம வோவென வமரர்க ளிரிதர வோக்கி | | | மும்மை வையமும் பூதர்தம் பிணமுகப் பித்தான். |
(இ - ள்.) மேலும் மேலும் ஆச்சரியத்துடன் போரினைச் செய் தெழுகின்ற பூதப்படையினைத் தன் கையாற்சேர்த்துத் தகர்த்தனனாகித் துவைத்தனன். தேவர்கள் அம்மவோ வென்னு மொலிக் குறிப்புடனோட அம்புகளைச் செலுத்தி மும்மை வையகமும் பூதர்கள் பிணம் உயரும்படி செய்தன னென்க. (வி - ம்.) மூன்று வையகமும் பூதர்கள் பிணமுயரச் செய்தன னென்க. துகைத்தல் - துவைத்தல். ஓக்கி - செலுத்தி. (476) | | சார தக்குழா முலைதலுந் தனதுபொற் றேரைச் | | | சார வாளரி முகத்தவன் றன்னெதிர் சார்ந்து | | | சார ருந்திறற் கண்ணனென் றுரைத்திடுந் தலைவன் | | | சார வார்கழு முள்ளினைத் தடவுரத் திட்டான். |
(இ - ள்.) பூதக்கூட்டங்கள் வருந்த (அப்போர்க்களத்தினிற்) பொருந்திய அந்தச் சிங்கமுகன் முன்னர்ப் பிறராலடைதற்கரிய வலியினை யுடைய கண்ணனென்று யாவரும் போற்றத்தக்க தலைவன் தன்னழகிய தேரினொடு பொருந்தி அச்சிங்கன் பெருமை பொருந்திய மார்பின்கண் நீண்ட மழுப்படை பொருந்தச் செலுத்தின னென்க. (வி - ம்.) பூதர்கள் உலைய சார் அவ் வாளரிமுகத் தவனெதிர் தேரொடு சார்ந்து உரத்துக் கழுமுள்சார இட்டனனென வினைமுடிவு செய்க. கழுமுள் - மழுப்படை. தேரை வேற்றுமை மயக்கம். (477) | | கழுமு ணுண்டுக ளாயது கைக்கதை யோச்சி | | | விழுவ தாக்கினன் வலவனை வெகுண்டரி முகவன் | | | பழுதி லாக்கதை யொன்றனாற் கண்ணனைப் பாற்றி | | | முழும ணிப்பொலந் தேர்க்கொரு பாகுமுன் னிட்டான். |
(இ - ள்.) அவன் மார்பிற்பட்ட மழுப்படை நுண்ணியதுகளாயது. (அதனைக் கண்ணுற்று) கையின்கண்ணிருந்த கதையை வீசிச் சிங்கன் |