| றேர்வலவனை விழுவதாம்படி செய்தனன். சிங்கமுகன் சீற்றமுற்றுச் சிறிதுங் குற்றமிலதாகிய ஒரு தண்டத்தால் கண்ணனைக் கெடுத்துப் பொன்னாற்செய்து பருத்த மணிகள் அழுத்திய தேரினுக்கொரு பாகனை முன்னர் நிறுவினன் என்க. (வி - ம்.) ஓச்சி - வீசி. அரிமுகன் - சிங்கமுகன். பாகு - பாகன். (478) | | குன்றெ டுத்துமேல் விடுத்தனன் சுமாலியக் குன்றம் | | | நன்று பற்றிமீட் டுய்த்தன னலிந்தனன் சுமாலி | | | ஒன்று தண்டினன் றண்டியென் றுரைப்பவ னோடிச் | | | சென்று சிங்கனை யெருக்கினன் சிதர்ந்தது தண்டம். |
(இ - ள்.) இந்நிகழ்ச்சியைக் கண்ணுற்ற சுமாலி யென்பவன் ஒரு மலையினை எடுத்துச் சிங்கன்மேல் விடுத்தனன். சிங்கன் அக்குன்றினை நன்றாகப்பற்றி அதனையே மீளச் சுமாலியின்மீது செலுத்தினன். சுமாலி வருந்தினன். பொருந்தும் தண்டமுடைமையாற் றண்டியென்று யாவரினும் மீப்படச் சொல்லும் தகுதியுடையான் ஓடிச்சென்று சிங்கனை யடித்தான். அச்சிங்கன்மேற் பட்டுத் தண்டஞ் சிதைவுற்றது. (வி - ம்.) ஒன்று தண்டினன் : வினைத்தொகை. எருக்கினன் - புடைத்தான். (479) | | தாக்கி னான்கரத் தானுமார் பத்திடைத் தண்டி | | | ஊக்கி னானவன் றாளினா லுகந்துபின் றணிவான் | | | மேக்கு யர்ந்ததிண் புயந்தொறுஞ் சிரந்தொறு மிதித்தான் | | | போக்கி னான்கரத் தீயெனத் தண்டியும் புரண்டான். |
(இ - ள்.) (தண்டி யென்பவன் தண்டந்தகர்தலும்) அச்சிங்க னுரத்திடைக் கையாலடித்தனன். அச்சிங்கன் தன் தாளால் (வானின் கட் செல்லும்வண்ணம்) செலுத்தினன். அங்ஙனம் காலால் வானின் கண்ணுயர்ந்துசென்று கீழிறங்குபவனாகிய தண்டியென்பான் சிங்கமுகன் மேலுயர்ந்த தோள்களிலும், தலைகளிலும், மிதித்தலைச் செய்தான். சிங்கன் தண்டா லடித்ததன்றிக் கையாலும்பற்றி ஈயென்னும் பறவை யென்று (கண்டோர் சொல்லும்வண்ணம்) வீசினான். தண்டியென்பவன் புரண்டு வீழ்ந்தன னென்க. (வி - ம்.) ஊக்கல் - செலுத்தல். ஐயசிறிதென்னையூக்கி யென்பதனா னுணர்க. உகந்து - உயர்ந்து. "உகப்பே யுயர்வே" யென்னும் தொல்காப்பியச் சூத்திரத்தா னறிக. மேக்கு - மேல். "மேக்கு மேற்றிசை மேலும்பேர்" என்னும் நிகண்டானறிக. (480) | | அலைக்க முற்றிய தலைவர்க ளின்னண மகல | | | இலக்கர் முற்றிவண் கணைகைதூ வாமைநின் றெய்தார் | | | நிலக்கட் குப்புறா நேர்புகுந் துதைத்துகைத் தொடித்துச் | | | சிலைக்குந் தேர்களைச் சேமத்தே ரொடுமுற்றுஞ் சிதைத்தான். |
|