| (இ - ள்.) சிங்கனைக்கோறற்கு வளைந்த படைத்தலைவர்கள் இங்ஙனமாக நீங்க இலக்கவீரரும் வளைந்து வளவிய கணைகள் ஒழிவில்லாமல் நின்றெய்தனர். சிங்கன் நிலக்கட்டாவி இலக்கருக்கு நேரிற்சென்று அவர்களை யுதைத்துத்துவைத்து (அவர்கள் விற்படைகளையும்) ஒடித்து ஒலிக்கின்ற சேமத்தேரொடு ஏனைய தேர்களையும், ஏனைய துணைக்கருவிகள் எல்லாவற்றையும் கெடுத்தன னென்க. (வி - ம்.) முற்றி - அடைந்து. கைதூவாமல் - ஒழிவில்லாமல். உகைத்தல் - துவைத்தல், சிலைத்தல் - ஒலித்தல் ; இதனைச் "சிலைத்தார் முரசங்கறங்க, மலைத்தனையென்பது நாணுத்தகவுடைத்தே" என்னும் புறப்பாட்டடியானுணர்க. (481) | | மலைத்த வீரர்கள் வலியிகந் தொருமருங் ககல | | | உலைத்த தானவன் றனதொரு தேரிடை யுகந்தான் | | | மிலைத்த தும்பையஞ் சிகழிகை வீரரில் வீரன் | | | அலைத்து மேல்வரு மவுணர்மே லையென வடுத்தான். |
(இ - ள்.) போரினைச் செய்த வீரர்கள் வன்மைநீங்கி யொருபக்கலிலொதுங்கிச் செல்ல அவர்களைவருத்திய சிங்கனென்பான் தனதொப்பற்ற தேரின்கண் உயர்ச்சியற்று விளங்கினன். தன்குஞ்சியில் வெற்றி கருதித் தும்பைமாலை யணிந்தவீரரில்வைத்து வீரனாகிய வாகு வென்பான் வருத்தித் தங்கண் மேல்வருகின்ற அவுணர்கள்மீது விரைவாகப் பொருந்தினனென்க. (வி - ம்.) உலைத்தல் - வருத்தல். உகத்தல் - உயர்தல். சிகழி - மயிர் முடி. ஐ : விரைவு. (482) வேறு | | வாங்கிய சிலையினன் விடுசர மழையினன் | | | மண்டில வகைமையி னமர்செய்தான் | | | தூங்குகை மதமலை யிறுவன விறுவன | | | துரகத நிரையுடை வனபொற்றேர் | | | ஓங்கிய வவுணர்க ளுடல்பல துணிபட | | | வுகுவன வுகுகறை நதியாகி | | | வீங்கிய பிணநிரை தழுவுபு முடுகுபு | | | வேலையி லிடுவன திசைதோறும். |
(இ - ள்.) வாகுப் பெயரான் சிலையினைவளைத்து, மழைபோலப் பெரிய அம்புகளைவிட்டு விற்போருக்குக் கூறிய மண்டிலவிலக்கணப்படி போரினைச் செய்தனன். அங்ஙனம் போர் செய்தஞான்று மதத்தினையுடைய யானைகள் இறப்பனவாம், குதிரையணிகள் இறப்பனவாம், அழகிய தேர்கள் உடைவனவாம். உயர்ந்த அவுணர்களின் உடல் பல துண்டங்களாகச் சிந்துவன. இந்நிலையில் அப்போர்க்களத்தின் கண்ணின்றும் புறப்பட்ட புண்ணீர் பலநதியாகிப் பருத்த பிணவரிசைகளைத் தழுவி விரைந்து திசைகளினுள்ள கடலின்கண் அப்பிணங்களை இடுமென்க. |