| (வி - ம்.) சிலையினன், மழையினன், வகையினன் என்பன எச்சமுற்று. இவைகளைக் "குழலன்கோட்டன் குறும்பல்லியத்தன்" என்றாற் போலக்கொள்க. கறை - புண்ணீர். (483) | | தூத்தகு மரைமலர் பலதொட ரியதொட | | | லைகளென வடிகர முடிபல்ல | | | கோத்தெழு கணைபல வவுணர்கள் குலமக | | | ளிர்கள்குலை வுறமனை தொறுஞ்செல்லும் | | | மீத்தழை யுலகவு ணர்கள்வெரு வரவவண் | | | விரவுறும் பாதல முறைவோர்கள் | | | பார்த்தல மரநெடு நிலன்கிழித் தெறுழ்கொடு | | | படர்வுறு மரன்மகன் விடுந்தோறும். |
(இ - ள்.) இறைவன் திருக்குமாரனாகிய வாகுப்பெயரான் அம்புகளைச் செலுத்துந்தொறும் அவ்வம்புகள் தூய்மைமிக்க பலதாமரை மலர்களாற்றொடுத்த மாலைகளென்று கண்டோர்சொல்லும் வண்ணம் பலவாகிய அடிகளையும், முடிகளையும், கரங்களையும் கோத்துக்கொண்டு பல அவுணர்கள் சிறந்த மகளிர்கள்வருந்த இல்லங்கடோறுஞ் செல்லா நிற்கும், செழித்த மேலுலகின் கண்ணுள்ள அவுணர்கள் அச்சங்கொள்ளும் வண்ணங் கலக்கும். கீழுலகின்கட் டங்குவோராகிய தானவர்கள் கண்டு மனஞ்சுழல நீண்டநிலத்தினைப் பிளந்து வலிகொண்டு செல்லா நிற்கும். (வி - ம்.) தொடரிய என்னும் பெயரெச்சம் தொடலைகளென்னும் பெயரோடு முடிந்தது. அலமரல் - சுழலுதல். (484) | | கூற்றுற ழவுணர்த மிறையவன் குலனொடு | | | முடிவது குறிக்கொளுற் பனமாகத் | | | தோற்றிய குருதியின் மழையென விடுகணை | | | துணியுடல் கொடுநெடு வெளியேக | | | ஊற்றிய வுதிரமெங் கணுமுகு மழையெதிர் | | | கோடலி னுகுகர மொளிர்புற்ற | | | நூற்றுவ ரரிமுகன் மதலையர் வீரன்செய் | | | நூழில்கண் டனர்சிலை வளைவித்தார். |
(இ - ள்.) தென்றிசைக்கோனை யொத்த தானவர்கள் தலைவன்தன் குலத்தொடுங் கெடுவதைக் குறித்துக் கொள்ளும் உற்பாதமாகக் காணப்படும் குருதிமழையைப்போல வாகுப் பெயரோன் விடுகின்ற அம்புகள் துண்டஞ்செய்த உடற்குறையினைக் கொண்டு நீண்ட வானின்கட்செல்ல அவ்வுடற்றுண்டத்தினின்றுஞ் சொரிந்தபுண்ணீர் எங்கணும் பொழியும் மழையாகும். அம்மழையை எதிர்நோக்கிநின்ற செங்காந்தளினைப் போலக் கீழ்வீழ்ந்த கரங்களொளிர்தலுற்றன. இங்ஙனம் வாகுப்பெயரான் கொன்றுகுவித்தல் செய்தலைக்கண்ணுற்றுச் சிங்கமுகன்குமாரர்கள் நூற்றுவர் வில்லினை வளைத்தனரென்க. |