| (வி - ம்.) ஒருதலைவனுக்குப் பின்னர்க் கேட்டினை யறிவித்தற்கு அவன்நாட்டுச் சோரிமழை முதலிய கேட்டின்குறிகள் காணப்படுதல் போல வாகுப் பெயரான் அம்புகள் உடற்றுணியை வானின்கட் கொண்டுசெல்ல அவ்வுடற்றுணியினின்றும் சொரியும் சோரியை மழையாகவும், அவ்வுடற்குறைகளினின்றும் அறுபட் டுகுவனவாகிய கரங்கள் சோரியோ டொளிர்தலை தலைப்பெயலை எதிரேற்ற காந்தளாகவும் உருவகங்கள் செய்தனர். கோடல் - காந்தள். ஒளிர்ப்பு - ஒளிர்தல், தொழிற்பெயர். உதிரம் என்பது மழையென்னும் பெயர்ப்பயனிலை கொண்டது. வளைதல் சிலையின்றொழில். (485) | | நிரைநிரை யவர்விடு கணைவில குபுசிலை | | | நெடுகிய விரதமு மொழிவித்தான் | | | பரைமக னவரிவன் சிலைவெல லரிதெனப் | | | படர்மதி யினரிது வலையாகில் | | | வருகென வுடைவளர் சுரிகையை யுரியினர் | | | வயவர்கள் வயவனு மதுகைக்கொண் | | | டரவென வெழுதலு மனைவரு மிகலின | | | ரவருடன் முழுவது நிலன்வீழ்த்தான். |
(இ - ள்.) இறைவியின் திருமகனாகிய வாகுப்பெயரோன் வில்லான் அந்நூற்றுவர் நிரைநிரையாகச் செலுத்திய கணைகளை நீக்கி அவர்கள் நெடியதேரினையும் கெடுத்தனன். அந்நூற்றுவர் இவனைவிற்றொழிலால் வேற லரிதென்று நினைத்த மதியுடையராகி இவ்வாட்டொழிலில் வல்லமையுடையையாயின் வரக்கடவாயென்று இடையின்கண்ணுள்ள வாட்படையினை உருவினர். வீரர்களுள்வைத்து வீரனாகிய வாகுப்பெயரோனும் அவ்வாட்படையைக் கையின்கட்கொண்டு அரவினைப்போலச் சீற்றமுற்று எழ அந்நூற்றுவரும் போர்செய்தனர். அந்நூற்றுவர் உடலினையும் நிலத்தின்கண் வீழ்த்தினனென்க. (வி - ம்.) விடுகணை : வினைத்தொகை. நெடுகிய - நீண்ட. பரை - இறைவி. வலை - வல்லை. சுரிகை - வாள். வயவர்வயவன் - வீரவாகு. (486) | | எதிர்வயி னிளையர்த முயிரொரு வனிலிறு | | | மிதுவிட விழிவினி யெவனேயென் | | | றதிர்கழ லரிமுக னடவிய தேரொடு | | | மணுகின னழலுமிழ் விழியோனும் | | | முதிர்சின மொடுமெதிர் குறுகினன் றூதுறு | | | முனைமக னிவனல திலையென்னா | | | விதிர்குரல் படவிறன் மொழிகட வினனரி | | | வியன்முகன் கடவின னிவன்வாளி. |
(இ - ள்.) என்முன்னரே என்புதல்வர்கள் உயிர்ஒருவனால் அழியு மிதனைக்காட்டிலும் இழிவு இனிவே றென்னையென்று கூறி ஒலிக்கின்ற |