| வீரக்கழலினை யணிந்த சிங்கமுகன் செலுத்திய தேருடனே குறுகினான். அழலினை வெளியிடுகின்ற விழியினையுடைய வாகுப் பெயரினையுடைய வனும் முதிர்ந்த சீற்றத்தோடு மெதிரேசென்றான். சிங்கமுகன் தூதாக முன்னர்வந்த மனிதன் இவனையன்றி வேறெவருமில்லையென்று நடுங்கும் வண்ணம் ஒலியுளவாக வலிபொருந்திய மொழிகளைக் கூறினான். வாகுப் பெயரமலன்கணைகளைச் செலுத்தின னென்க. (வி - ம்.) விதிர் - நடுக்கம். அச்சமுமாம். (487) | | தடவுர மருவிய வாளிகள் பழுதொடு | | | தரைவிழ வரிமுக னொருதண்டம் | | | விடவது துகள்புரி கணைசில வேவுபு | | | வெங்கணை யாயிர முடியுய்த்தான் | | | கடவுள ரிடர்தப வருபவ னக்கணை | | | கரிதலு மரிமுக றொருசூலம் | | | நடவினன் பலமுறை விடுகணை துமியமு | | | னணுகிய திவன்சுரி கையினட்டான். |
(இ - ள்.) பெருமைபொருந்திய மார்பின்கட்பொருந்திய கணைகள் பழுதுபட்டுக் கீழ்வீழச் சிங்கமுகன் ஒருதண்டத்தினைச் செலுத்த அத் தண்டத்தினைத் துகளாம்படி செய்யும் கணைகள் சிலவற்றைச்செலுத்தி ஆயிரங்கொடிய கணைகளை முடியின்கண்ணே செலுத்தினன். தேவர்கள் துன்பினைநீக்க வருபவனாகிய வாகுப்பெயரோன் அக்கணைகள் (சிங்க முகன் மேற்பட்டுக்) கரிந்துவிழ அச்சிங்கமுகன் ஒரு சூலப்படையினைச் செலுத்தினன். அச்சூலப்படை பன்முறைவிட்டகணைகள் கெடமுன்னர் குறுகியது. வாகுப் பெயரோன் வாளினா லச்சூலப்படையினை வெட்டி வீழ்த்தினன். (வி - ம்.) தடம் - பெருமை. ஏவுபு - ஏவி. தப - நீங்கும்படி. நடவினன் - செலுத்தினன். (488) | | அட்டவன் வெகுளிமிக் கெழுதலு மிவனுயி | | | ரடுகுவ லெனவிறை படைதொட்டான் | | | ஒட்டல னதுவரல் காணலு மப்படை | | | யொருகையி னிருந்தது தனைவிட்டான் | | | முட்டின திரிந்தன மீண்டன வீரனு | | | முருகனி லலதிவ னுயிர்மன்றப் | | | பட்டிட லரிதிவன் வார்சிலை தேர்முதல் | | | படவமர் புரிகுவ லெனமூண்டான். |
(இ - ள்.) அட்டவனாகிய வாகுப்பெயரோன் சீற்றமிக்கெழ இவனுயிரைக் கோறல் செய்வேனென்று இறைவன் படையினைச் செலுத்தினன். பகைவனாகிய சிங்கமுகன் அவ்விறைபடை வருதலைக் கண்டளவில் (தன் கைக்கண்ணிருந்த) இறைபடை யொன்றினை விட்டனன். |