| அவ்விறைபடைக ளிரண்டும் (ஒன்றுடனொன்று) முட்டித் திரிந்து மீண்டன. வீரவாகுவானவன் முருகனாலல்லது உறுதியாக வேறெவராலும் இச்சிங்கமுகனுயிர் படுதலின்றாகுமென்று கருதி அச்சிங்கமுகன் நீண்ட வில் தேர் முதலியவைகள் கெடப் போரினைச் செய்வேனென்று எதிர்ந்தனன். (வி - ம்.) இறைபடை - பாசுபதாஸ்திரம்; ஒட்டலன் - பகைவன். மன்ற - தேற்றமாக. (489) வேறு | | வலவ னுயிரைச் சிலகணையான் மடித்தான் வீர னொருதண்டம் | | | கலதி யவுணன் விடமார்பங் கலந்து துகள்பட் டதுவீரன் | | | பலவெங் கணையா லவன்றேரைப் படுத்தா னந்தப் பதநோக்கி | | | அலகில் பூத வீரர்களு மார்த்துச் சமரின் மேலடர்ந்தார். |
(இ - ள்.) வீரவாகு தேரைச் செலுத்துபவனுயிரினைச் சிலகணைகளாற் போக்கினான். கேட்டினைச்செய்கின்ற அவுணனாகிய சிங்கமுகன் ஒருதண்டத்தினைச் செலுத்த அத்தண்டம் வீரவாகுவின் மார்பிற்பட்டுத் துகளாயது. வீரவாகு பலகடுங்கணையான் சிங்கமுகன்றேரினைப் போக்கினான். அச்செவ்வியை நோக்கி அளவில்லாத பூதவீரர்களும் ஆரவாரஞ்செய்து மேலும் போரின்கண் ணணவினாரென்க. (வி - ம்.) வலவன் - பாகன். கலதி - கேடு. பதம் - காலம். ஆர்த்து - ஆரவாரித்து. (490) | | நெருப்பிற் கனன்று சிங்கமுக | | | னெடிய மணித்தே ரொன்றிவர்ந்து | | | பொருப்புக் குலங்க ளெனச்சிலைகள் | | | போகு கரமா யிரத்தேந்தி | | | அருப்பு முலையார் வாள்விழியி | | | னொவ்வொன் றலகி லுயிர்மாய்க்கும் | | | செருப்பொற் கணைகள் பலகோடி | | | செறியத் தொடையொன் றினிலெய்தான். |
(இ - ள்.) சிங்கமுகனென்பான் அழலைப்போலக் கனலுதல்செய்து நீண்டஅழகிய தேரொன்றின்மே லிவர்ந்து மலைகளின் கூட்டம்போல விற்களை நீண்ட ஆயிரங்கைகளினுந்தாங்கி அரும்புபோன்ற தனங்களை யுடைய பெண்கள் ஒளிபொருந்திய கண்கள்போன்று ஒவ்வொரு கணையும் பலஉயிர்களைப் போக்கும் போரினுக்குரிய பலகோடிக்கணக்கான கணைகள் நெருங்கும் வண்ணம் ஒருதொடுப்பினெய்தன னென்க. (வி - ம்.) குறித்தகுறியிற் றப்பாது வருதலின் பெண்களின் கண்களை உவமையாகக் கூறினார். (491) |