| | தவக்கூ ளியர்க டொகைசாய்க்குந் | | | தருக்கள் சாய்க்கு மலைபொதிர்க்கும் | | | நவக்கோ ளறுக்கு நாளறுக்கு | | | நட்டா ருயிரும் வாய்மடுக்கும் | | | துவக்கோ டுதிரச் சேறளையுஞ் | | | சுரருக் கலக்க ணனிபெருக்கும் | | | பவக்கூ டெனுமாக் கையர்க்கெல்லாம் | | | பரிவு புரியு மவன்வாளி. |
(இ - ள்.) சிங்கமுகன் விடுத்தகணைகள் மிகுதியாகப் பூதர்கள் கூட்டங்களைக் குறைக்கும். மலைகளைத்துளைத்தல் செய்யும். ஒன்பான் வகைக்கோள்களையும் கெடுக்கும். இருபானெழுநாண் மீன்களையும் கெடுக்கும், (எதிர்ந்துவரின்) நட்பாயினாருயிரினையும் உண்ணும். தோலினோடுசெந்நீ ரோடுகூடிய சேற்றின்கண்ணேமூழ்கும். தேவர்களுக்குந் துன்பினைச்செய்யும். பாவங்கட்குறைவிடமென்று சொல்லத் தகுமுடலினையுடைய ரெவர்க்குந் துன்பினைச் செய்யுமென்க. (வி - ம்.) தவ - உரிச்சொல். பொதிர்த்தல் - துளைசெய்தல். துவக்கு - தோல். அலக்கண் - துன்பம், பாவம் குறுக்கல்விகாரம். பரிவு - துன்பம். (492) | | திசையும் வானும் படைகடவாச் | | | செறியத் திரக்கூ டுறுத்தாங்கு | | | விசையிற் றிரியுங் கணைமயமே | | | விரிமூ வுலகுந் தோற்றுதலும் | | | வசையில் வீர னொருநொடியில் | | | வயின்றோ றுலப்பில் கணைதூண்டிப் | | | பசையி லவுணர் நறுமொறுப்பப் | | | பலவு மறுத்து வெளிசெய்தான். |
(இ - ள்.) திசைகளினிடத்தும், வானினிடத்துங் கணைகளைச் செலுத்திச்செறிந்த அம்புக்கூட்டினை அமைத்தாற்போல விரைவாக இயங்குகின்ற கணை வடிவமேவிரிந்த மூன்றுலகின் கண்ணுந்தோற்றுதலான் வீரராற்பழித்தலொரு சிறிதுமிலவாகிய வீரவாகு நொடிப் பொழுதின்கண் இடமிடங்கடோறு மளவிலவாகிய கணைகளைச்செலுத்தி (உள்ளத்தேசிறிதும்) அன்பிலராகிய அவுணர்கள் அழுக்காறுகொள்ளப் பல கணைகளையுமறுத்து வெளிசெய்தன னென்க. (வி - ம்.) அத்திரக்கூடு - அம்புக்கூடு. பசை - அன்பு. நறு மொறுப்ப - அழுக்காறு கொள்ள. (493) | | அமரர் வியந்தா ரதுவியப்போ | | | வரிமா முகனு நனிவியந்து |
|