| | சமரச் சிலைநின் பொருட்டெடுத்தேன் | | | சாய்த்தே னினைவே ளொடுமென்றான் | | | நுமர்போ னீயும் புனைந்துரைக்கும் | | | வென்றி யலது நுதலியாங் | | | கெமர்போன் முடிக்கும் பொருள்வென்றி | | | யெய்தா யென்றான் றனிவீரன். |
(இ - ள்.) இங்ஙனம் வீரவாகு போர்செய்தலைக் கண்ணுற்றுத் தேவர்களும்வியந்தனர். (அங்ஙனம்) அவர்கள்வியந்தது வியப்பாகுமா? (பகைவனாகிய) சிங்கமுகனும் மிகவும் வியப்புற்றுப் போரினுக்குரிய வில்லினை நின்பொருட்டே எடுத்துளேன். (உன்தலைவனாகிய) முருகனோடு நின்னையும் இப்பொழுதேகொன்றேன் என்றுகூறினான். நுந்தானவர்குலத்து வீரர்களைப்போலப் புனைந்துகூறும் சொல்வென்றியல்லாமல் சொல்லியவண்ணஞ் செயலில்முடித்துக் காட்டும் எம்மவர்களாகிய தேவர்களைப்போன்று பொருள்வென்றியை யடையமாட்டாய் என்று கூறினான் ஒப்பற்ற வாகுப்பெயரோன் என்க. (வி - ம்.) நனி - மிகவும். சமரம் - போர். துணிவுபற்றிச்சாய்த்தேன் என்றிறந்தகாலத்தாற் கூறினான். வேள் - முருகன். (494) | | சீற்றங் கிளரச் சிங்கமுகன் சிலையா யிரமும் வளைவித்து | | | வீற்று வீற்று விடுசரங்கள் விலக்கி வீரன் மேல்விடுத்தான் | | | பாற்றி யவற்றைச் சிங்கமுகன் பாணிச் சிலையை யிறுத்தமரன் | | | மாற்றோர் சிலைகைக் கோடுமுன்ன மருமத் துலப்பில் கணைசெறித்தான். |
(இ - ள்.) சிங்கமுகன்சீற்றம் மேன்மேலெழ ஆயிரம்வில்லினையும் வளைத்தல்செய்து வெவ்வேறாகவிட்ட கணைகளை வீரவாகு விலக்குதல் செய்து அச்சிங்கமுகன் மேற்கணைகளை விடுத்தனன். சிங்கமுகன் அக்கணைகளைக்கெடுத்து வீரவாகுவின்கைக்கண்ணுள்ள வில்லினைக்கெடுத்து அவன்வேறு வில்லினைக் கோடற்குமுன் மார்பின்கண் பலகணைகளை விடுத்தன னென்க. (வி - ம்.) வீற்றுவீற்று - வேறுவேறு. பாற்றி - கெடுத்து. (495) | | ஆறு கொளச்செங் குருதியுக வமரர் களைக ணெனநின்றோன் | | | சீறி விசிக மாயிரத்தாற் சில்லி யிரதஞ் சிதர்செய்து | | | வேறு மணித்தே ரிவர்முன்னம் விடுக்கும் வாளி யாயிரத்தால் | | | மாறில் சிலையா யிரமுமவன் மதிப்போ டொருங்கு விழவறுத்தான். |
(இ - ள்.) யாறுபோன்றொழுகுதலைக் கொள்ளும்வண்ணம் செந் நீரானதுஇழிய தேவர்களுக்குப் பற்றுக்கோடாகநின்ற வீரவாகு சீற்றங் கொண்டு ஆயிரங்கணைகளான் உருளினையுடைய தேரினைப்பொடியாக்கி அழகியவேறொரு தேரின்கண் அவன் இவர்தற்குமுன்னஞ் செலுத்துகின்ற ஆயிரங்கணைகளான் ஒப்பின்றாகியவிற்கள் ஆயிரத்தினையும் அச்சிங்கன் நன்மதிப்போடு ஒருசேரவீழும் வண்ணம் அறுத்தன னென்க. |