| (இ - ள்.) கந்தனை எதிர்த்து (அமரினைச்செய்கின்ற) நம்படை சிறிது ஆதலால் (சிங்கமுகனொடு) வலிமையுடன் நிலைபெறாது. இங்குள்ளவாகிய படையனைத்தினையுஞ் செலுத்துகவென்று கட்டளையிட்டுத் தன்னிளவலாகிய சிங்கமுகன் போர்செய்தலை நோக்க வானின்கண் ணுயர்ந்த அத்தாணிமண்டபத்தின் கண்ணேறினானென்க. (வி - ம்.) காழ்ப்பு - மனத்திட்பம். உந்தினன் - செலுத்தினன். அத்தாணி - திருவோலக்கமண்டபம். (503) | | வியவரின் முரசறை விப்ப முன்னினோன் | | | கயமுத னாற்படைக் கடலு மாநகர்ப் | | | பயிலிட மொரீஇப்பறந் தலையின் முற்றின | | | இயலிட மிறந்தன வீண்டு சேனையால். |
(இ - ள்.) (சூரனாற் கட்டளையிடப்பெற்று) அடைந்தவனாகிய தலைவன் ஏவலாளர்களானே (சூரன்கருத்திஃதென) முரசினை அறைவித் தலைச்செய்ய யானையை முதலாகக்கொண்ட நால்வகைப்படையாகிய கடல் பெரிய அத்தலை நகரின்கட் டாங்கள் தங்கிய இடத்தினின்றும் நீங்கிப் போர்க்களத்தையடைந்தன. அங்ஙனம்நிறைந்த படைப்பெருக்கால் பெரியநிலவெல்லை சிறிதுமிடமின்றாம்படி சென்றனவென்க. (வி - ம்.) முன்னினோன் வியவரின் முரசறிவிப்பவெனக் கூட்டுக. (504) | | முப்புர மட்டநாண் முதன்மை பின்னெனும் | | | அப்பெருந் தேவர்த னாற்ற றெள்ளுறத் | | | துப்புடை வீரர்பாற் றோல்வி பன்முறை | | | வைப்பவ னாகிய வள்ள னேர்ந்தனன். |
(இ - ள்.) புரமெரித்தற்குப் பொருந்திய தேவர்கள் நாந்துணை செய்யாதுவிடின் புறமெரித்தலெங்ஙன மியையுமெனக்கருதித் தருக் குற்றதனையறிந்து இறைவன் இத்தேவர்கள் துணைவேண்டாது (சிரித்து) முப்புரத்தினையட்டகாலத்து (செத்துப்பிறக்கின்ற மற்றைத்தேவர்கள் தங்களை முதல்வன்எனக்கோடுந்) தலைமை (இவ்விறைவன்முதன்மைக்கு) பின்னாகத் தக்கதெனக் கருதுகின்ற அப்பெரியதேவர்கள் (இஞ்ஞான்றுந்) தெளியவலியினையுடைய நவவீரர் இலக்கர்முதலியோர் இடத்துத் தோல்வியினைப் பலமுறையும் சேர்ப்பவனாகிய வள்ளல் போரி லெதிர்ந்தனனென்க. (வி - ம்.) துப்பு - வலி. வள்ளல் - முருகன். (505) வேறு | | கண்டவுண ரெங்கணும்வ ளைந்துபடை கொண்டுகதழ் | | | வுற்றமரி யற்ற வடிகள் | | | கொண்டொருசி லைக்கணுறு நாணொலியெ டுத்தனர்கு | | | லைந்துபல வண்ட முழுதும் |
|