| | விண்டனநெ டுங்கிரியு மண்டலமு முக்கஞெமிர் | | | மீன்கடறு ளும்பி னபடை | | | ஒண்டரைவி ழுந்தனவு லம்பினக ரிப்பரியு | | | டைந்தனதி ரண்ட விரதம். |
(இ - ள்.) (இங்ஙனம் போரினுக்கெதிர்ந்தவனைக்) கண்ணுற்ற அவுணர்கள் (பறந்தலை) யாண்டும் வளைதலுற்று படைக்கலங்களைக் கையிற்கொண்டு விரைந்து போரினைச்செய்யத் தலைவராகிய பிள்ளையார் ஒருசிலையினிடத்துப் பொருந்திய நாணின்கண்ணின்றும் ஒலியெழும் வண்ணஞ் செய்தனர். (அங்ஙனஞ்செய்தவளவில்) எல்லாவண்டங்களும் நிலைகுலைந்தன. உயர்ந்த மலைகளெல்லாம் பிளந்தன, மண்ணாகிய இடமெல்லாம் தூளியாயின; (வானின்கட்) பரந்தமீன் குலங்களெல்லாம் நிலைகலங்கின, வீரர்களெல்லாம் நிலத்தின்கண் வீழ்ந்தனர்; யானைப் படையும், குதிரைப்படையும் சுழன்றன; திரண்டுநின்ற தேர்கள் யாவும் சிதர்ந்தன வென்க. (வி - ம்.) அடிகள் - சுவாமிகள். ஞெமிர்தல் - பரத்தல். உலம்பல் - சுழலல். இதனை "ஓடுந்திரிவட்டமென வொய்யெனவுலம்பி" என்னும் சிந்தாமணியடிகளானுணர்க. (506) | | ஈதுபுரி வன்மைய னெனக்கிளவ லாருயிரி | | | றுத்தவிளை யோனி வனுயிர் | | | காதுவலெ னக்கடிது முந்திமொழி வான்கருத | | | லார்தமைய டக்க லரையர் | | | நீதியது செய்தனமெ மக்கறவை யெண்ணலனு | | | மல்லைநிகழ் போர்க ருதிவே | | | றாதியிது வென்னையுரை யென்றரிமு கத்தவன | | | றைந்திடவு ரைப்ப னமலன். |
(இ - ள்.) இங்ஙனமாய செயலினைச்செய்யும் வன்மையுடையான் என்இளவலாகிய தாரகனுயிரினைக் கொன்றவனாகிய குமரனாவான். இவனுயிரினை யிப்பொழுதே கொல்வேனென்று விரைவின் முற்பட்டுச் சொல்லத்தொடங்குவான். பகைவர்களை அடக்குதல் அரையர்கள் அறமாம். அதனைச்செய்தோம். அங்ஙனஞ்செய்தல் அரையராகிய எங்களறமாகும். நீஎமக்குப் பகைவனுமில்லை. இங்கு நிகழ்கின்ற போரினைக்கருதி (அன்புடைமைகாட்டாது) வேறுபாடுடையவனாக விருக்கின்றாய். இந்நிகழ்ச்சிக்கு ஏது என்னையென்று சிங்கமுகன்கூற மலமற்றவனாகிய முருகன் திருவாய்மலர்ந்தருளுவன். (வி - ம்.) அறவை - அறம். "அறவையாயிற் போரொடுதிறத்தல்" என்னும் புறத்தானறிக. (507) | | தஞ்சமுள ரைத்தறுக ணாளர்கள லைப்பினவர் | | | தங்களைமு றைக்க ணிறுவி |
|