| | விஞ்சுமகி லாண்டமுமொ ருங்கரசி யற்றுமொரு | | | வேத்தியல்ப டைத்த விறையான் | | | அஞ்சலிர ருங்கடவு ளார்திரளை வெஞ்சிறையி | | | னாக்குதலி னுங்க ளுயிரை | | | எஞ்சுதலி லாதுணவி றுத்தமரி னின்றனனெ | | | னச்சுளிவி னோட ரிமுகன். |
(இ - ள்.) எளியார்களை அஞ்சாமையுடையார் வருத்தின் (அத்தறு கணாளரைஒப்ப நாடி ஒறுத்து) நீதியின் கணிலவச்செய்து மிக்க பல வுலகங்களையும் ஒருசேர அரசு செலுத்தும் அரசினைப் பொருந்திய தலைவன்யான் (நீவிர்) சிறிது மஞ்சுதலிலராய்அரிய தேவர்கூட்டங்களை வெவ்விய சிறைக்கணாக்குதலினான் நுங்களுயிரைக்கொன்று குறைவின்றி யுண்ணுதலைச் செய்யப் போரின்கண்ணே நின்றனனென்று முருகன் சொல்லச் சீற்றத்துடன் சிங்கமுகன். (வி - ம்.) தஞ்சம் - எளிமை. "தஞ்சக்கிளவி யெண்மைப்பொருட்டே" என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தானறிக. (508) | | யாங்களெளி யோம்வலியை நீயெமைமு றைக்கணியை | | | விப்பதுமெய் பாதி படையை | | | ஓங்குதய மால்வரையு றுத்தினனி னக்கெதிரொ | | | ழிந்தபடை முற்று மகடு | | | தாங்கினனொ ருத்தர்குறை மாற்றலுறு வார்குறைத | | | மக்குறுதல் செய்கு வர்கொலோ | | | தேங்கொளிய வேற்படையி னாற்றலும றிந்துளனெ | | | னச்சிறிய பேசி னனரோ. |
(இ - ள்.) (ஐய) யாங்கள் எளிமையையுடையேம். நீ வன்மையை யுடையாய் எங்களை முறைமைக்கண்ணே நிறுவச்செய்வது உண்மையே யாகும். நும்படையிற்பாதியை உயர்ந்த உதயமலையின் கட்சேர்த்தேன். உனக்கெதிராக நின்ற ஏனைப்படையாவையும் வயிற்றின் கட்டாங்கி யுள்ளேன். ஒருவருக்குற்ற குறையினை நீக்கும்வன்மையினையுடையார் தமக்குக் குறையுறும்படியாகச் செய்வார்களோ. நிறைந்த ஒளியினையுடைய வேற்படையின் வன்மையும் நானறிந்துளேன் என்று சிறிய புன்மொழிகள் கூறின னென்க. (வி - ம்.) அகடு - வயிறு. (509) | | நன்றிவன கந்தையென நாயகன கைத்தழலு | | | நஞ்சுகனி யோர்க ணைவிடக் | | | குன்றுறழு ரந்துளைப டுத்துவெரி நேகவது | | | கூளியர்வெ ளிக்கொள் வழியாய் |
|