| | நின்றதவ னோக்கியொரு செங்கையி னடைத்துநெடி | | | தோச்சியொரு வார்க தைவிட | | | வென்றியிளை யோனெதிர்வி டுத்தகணை நான்கதுவி | | | லக்கிநுதன் மூழ்கி யனவே. |
(இ - ள்.) இச்சிங்கமுகன் அகந்தை நல்லதாகுமென்று இறைவன் சிரித்து அழற்சியைச் செய்கின்ற நஞ்சுதோய்த்து முதிர்ந்த ஒருகணையினைச் செலுத்த (அக்கணை) அவன் மலையினையொத்த மார்பத்தைத்துளை செய்து முதுகின்புறத்தேசெல்ல (அக்கணை சென்றவழியே) கூரியபடைகள் வெளிச்செல்லும் வழியாக நிலைபெற்றது. அதனைச் சிங்கமுகன் பார்த்துத் தன் செம்மைநிறமுள்ள கையினாலப்புழையை அடைத்து நீண்ட தண்டமொன்றினை வீசிச்செலுத்த வென்றியினையுடைய முருகன் (அத்தண்டத்திற்கு) எதிராகச் செலுத்திய நான்கு கணைகள் அத்தண்டத்தினையுண்டு அவன்நெற்றியின்கண் மூழ்கினவென்க. (510) | | மம்மர்மிக நின்றனன டைத்தகை வழுக்கவழி | | | கண்டுமிடை பூதர் களெலாம் | | | இம்மெனுமு னம்வெளியி னேகியிறை வன்புடையி | | | லெய்தினர்க ளாங்கொ ருகணை | | | செம்மல்விட வேகியவன் யாத்தபடை சிந்தியொரு | | | தேரெனவி ளங்கி யவரை | | | அம்மகொடு போந்துமுன்வி டுத்துநுழை தூணியின | | | மர்ந்ததுவி டுத்த பகழி. |
(இ - ள்.) (சிங்கமுகன் நெற்றியின்கட் கணைகள் மூழ்கியதனால் மயக்கம்மிக நின்றனன். (அம்மயக்கத்தான் மார்பிற்புழையை) அடைத் தகையானது வழுக்குதல் செய்ய (அவன் வயிற்றின்கட்டங்கிய) பூதப் படையினர் யாவரும் (நாம் வெளிச்செல்வதற்குரிய) நெறியஃதே யெனக்கண்ணுற்று இம்மென்னும் ஒலிக்குறிப்பு நிகழும் காலஅளவைக்குள் வெளிப்போந்து இறைவன் பக்கலிற்சேர்ந்தனர். அஞ்ஞான்று ஒருகணையினைத்தலைவனாகிய முருகன் செலுத்த அக்கணை உதயவெற்பிற் சென்று அச்சிங்கமுகன் கட்டிவைத்திருந்த மாயைக்கயிற்றைக் கெடுத்துத் தேரினைப்போலத் தோற்றி அம்மாயைக்கயிற்றாற் கட்டுண்டவரைக் கொண்டுவந்து இறைவன்முன்னர் விட்டுத் தான் நுழைதற்குரிய அம்புக் கூட்டில் தங்கியதென்க. (வி - ம்.) மம்மர் - மயக்கம். இம்மெனும் : விரைவுக்குறிப்பு. செம்மல் - முருகன். அம்ம : அசைச்சொல். (511) | | நாணொலியின் முந்துவிழு தானவர்தெ ளிந்துநனி | | | போர்புரிய நாதன் விசிகம் | | | ஏணுடைய வார்சிலைவ ணங்கவள வில்லவெழு | | | வித்தனனொ ரம்பு பலவாய்க் |
|