பக்கம் எண் :

830தணிகைப் புராணம்

 காணுறும ரப்பணைகி ளைத்தொகைவ ளார்விரிவு
           காட்டிஞெமிர் சேனை முழுதும்
 கோணைவலி சிந்தவடல் செய்தனக றைக்குடிஞை
           கூர்ந்துகட லோடு பொருத.

(இ - ள்.) நாண்கயிற்றினோசையான் முன்னர் இயக்கமில்மயக்க முற்று வீழ்ந்த தானவர்கள் தெளிவுற்றுமிகவும் போரினைச்செய்ய இறைவன் கணைகள் வலியினையுடைய நீண்டவில்வளைய அளவிட முடியாத கணைகளை எழச் செய்தனன். (அங்ஙனம் எழுந்த கணைகள்) ஒரு கணை பலவாகக் காணப்பெறுகின்ற மரப்பணை, கிளைகளின்றொகை, வளார் முதலியன ஒன்றினொன்று தொடர்புற்று விரிந்தாற்போல (ஒன்றினொன்று தோற்றித் தொடர்புற்று) விரிதலைச்செய்து பரந்த படைகள் யாவும் மிக்கவலிகெடக்கோறல் செய்தன. இரத்தயாறு மிகுந்து பெருக்கெடுத்துக் கடலினோடு மோதினவென்க.

(வி - ம்.) ஏண் - வலி. கோணை - வலி. குடிஞை - நதி. "குடிஞை யிரட்டுங் கோடுயர் நெடுவரை" என்பதனானுணர்க.

(512)

 சோகமுமி ளங்குமர னெய்தகணை மூழ்கவுறு
           தூலவுரு வுந்த விர்தர
 ஏகனென நின்றவவு ணன்றனதி ரும்படையி
           றந்ததுமி றந்த படைகள்
 மாகர்பணி வேலிறைம ருங்குமிடை வுற்றதும
           தித்துவில்வ ளைத்து விசிகம்
 ஏகமென வுந்தினன றுத்தெதிர்ச ரம்பலவி
           டுத்தனன கைத்தி ளையவன்.

(இ - ள்.) சோர்வும் இளையனாகிய குமரப்பெருமான் செலுத்திய கணைகள் பாய்தலாற்றான் (மாயையாற் கொண்ட) பேருருவும் நீங்கத் தனியாக நின்றவனாகிய சிங்கமுகன்றனது பெரியபடை இறப்புற்றதனையும் இறப்புற்ற (இறைவன்) படைகள் தேவர்கள் வணங்கத்தகும் வேற்படையினையுடைய அவ்விறைவன் பாலுற்றதனையும்கருதி வில்லினை வளைத்துக் கணைகளை மேகம்போலச் சொரிந்தனன். இளையோனாகிய முருகன் சிரித்து அவன் செலுத்திய கணைகளை யெல்லா மறுத்து அவனெதிரிற் பலகணைகளைச் செலுத்தினனென்க.

(வி - ம்.) இவன் சோகமெய்தியது, இப்படலம் 511 வது செய்யுளானும், பேருருக்கொண்டது, இப்படலம் 506 வது செய்யுளானுமறிக.

(513)

 விலக்கிவரு வெங்கணைபல் வாளியின்ம டங்கன்முகன்
           வேளிரத மூர்ப வன்வலி
 கலக்கவிளை யோனவுணன் வையமழி விப்பவவன்
           காசினியி னின்று பகழி