| | இலக்கமிசை யேயினனி றுத்தவையொ ராயிரவெ | | | றுழ்ச்சிலையும் வீழ்த்த முருகன் | | | குலக்கழுமு ளொன்றவுணன் விட்டனனி ருங்கணைகொ | | | டுத்திறைவ னட்டன னரோ. |
(இ - ள்.) (முருகள் செலுத்திய கொடியகணைகளை) சிங்கமுகன் பலகணைகளான் விலக்குதல் செய்து முருகன்றேரினைச் செலுத்துபவன் வலியினைக் கலங்கச்செய்ய இளையவனாகிய முருகன் சிங்கமுகன்றேரினை யழித்தல் செய்ய (தேரின்மையான்) அவன் நிலத்தின்கணின்று இலக்க மென்னுந் தொகையினையுடைய கணைகளை முருகன்மீது செலுத்தினன். முருகன் அங்ஙனம் செலுத்திய இலக்கங் கணைகளையுங்கெடுத்து ஆயிரங் கணைகளான் அவன் வில்லினையும் கீழ்வீழும்வண்ணம் செய்தனன். அவுணனாகிய சிங்கமுகன் சிறந்த சூலமொன்றினை ஏவினன். இறைவனாகிய முருகன் பெரிய கணையொன்றினை விட்டு அச்சூலத்தினைக் கெடுத்தனனென்க. (வி - ம்.) கழுமுள் - சூலம். முருகன்தேர் செலுத்துபவன் - வாயு. வையம் - தேர். காசினி - நிலம். (514) வேறு | | சூல மட்டபி னொராயிரங் கணைமிசை தொடுத்தான் | | | பால னாங்கவன் றண்டினப் பகழிகள் சிதர்த்து | | | மேல டர்ந்தனன் விசாகனக் கரந்தொடுத் தறுத்தான் | | | ஞாலம் வீழ்கதை யெடுத்துமே னடத்தின னண்ணான். |
(இ - ள்.) சூலப்படையினை அறுத்தபின்னரும் முருகன் அவன் மேல் ஓராயிரம் அம்புகளை எய்தனன். அப்பொழுது அவ்வவுணன் ஒரு தண்டினாலே அவ்வம்புகளைச் சிதறும்படிசெய்து பின்னரும் அத்தண்டு கொண்டே போர் தொடங்கினன். அதுகண்ட முருகப்பெருமான் தண்டேந்திய அக்கையினை ஒருகணையாற்றுணித்தனன். துணித்தலும் நிலத்தின்மேல் வீழ்ந்த அத்தண்டினை மற்றொருகையானெடுத்துக் கொண்டு அவ்வவுணன் போர் செய்யலானான். பாலன் - முருகன். சிதர்த்து - சிதறச்செய்து. விசாகன் - முருகன். கணைதொடுத்தென்க. ஞாலம் - நிலம். நண்ணான் - பகைவன். (515) | | தண்ட முந்தகர் வித்தனன் சாமிமுன் சமன்பால் | | | கொண்ட பாசத்தை விடுத்தனன் கோளரி முகத்தோன் | | | கண்ட மாக்கினன் காங்கெயன் கரங்கொடு பற்ற | | | மண்டி னானவன் வார்கர முழுதுஞ்சே யறுத்தான். |
(இ - ள்.) எம்பெருமான் அத்தண்டையும் கணைகளானே தகர்த்தனன். அதுகண்ட அச்சிங்கமுகாசுரன் தான்முன்னர் மறலியிடத்தினின்றும் கவர்ந்து கொண்டிருந்த கயிற்றை எறிந்தனன். இறைவன் |