பக்கம் எண் :

832தணிகைப் புராணம்

அக்கயிற்றையும் அறுத்தொழித்தனன். கயிறற்றதுகண்ட அவ்வசுரன் தன் கைகளாலே எம்பெருமானைப் பற்றிக்கோடற்கு விரைந்துவந்தனன் அதுகண்ட வேள் அவனுடைய கைகள் அனைத்தையும் கணைகளானே அறுத்து வீழ்த்தினன்.

(வி - ம்.) சாமி - இறைவன். சமன் - மறலி. பாசம் - கயிறு. கோள் - கொலைத்தொழில். காங்கெயன் - முருகன். முருகனைப்பற்ற வென்க. வார் - நெடிய.

(516)

 அற்ற பாணிமண் விழுமுனா யிரத்திரு புயமும்
 செற்ற நின்றனன் சேந்தன்மூ வாயிரங் கணைதொட்
 டுற்ற தோற்களு முடிகளு மொருங்குமண் வீழ்த்தான்
 எற்ற முள்ளவ னவைபினு மெழவிது மொழிவான்.

(இ - ள்.) அறுபட்டகைகள் நிலத்திலே விழுமுன்னர் இரண்டா யிரங்கைகளும் முளைத்துச்செறியாநிற்பச் சிங்கமுகன் ஊறுபடாமல் நின்றனன். அதுகண்ட செவ்வேள் மூவாயிரம் அம்புகளைத் தொடுத்தேவி முளைத்துப் பொருந்திய அக்கைகளோடு தலைகளும் ஒருசேர நிலத்திலே வீழும்படி செய்தனன். அக்கைகளும் தலைகளும் மீண்டும் முளைத்தெழா நிற்ப, இத்தகைய வரமாண்புடைய அவ்வவுணன் முருகனை நோக்கிக் கூறுவான்.

(வி - ம்.) பாணி - கை. ஆயிரம் இரட்டைப்புயம் என்றவாறு. சேந்தன் - முருகன். செற்ற - செறிய. புதிதாக முளைத்துச் செறியா நிற்ப என்றவாறு. செற்றல் - செறிதல். முடி : ஆகுபெயர், தலை. எற்றம் : விகாரம், ஏற்றமென்க.

(517)

 எண்ணில் காலநின் றறுப்பினு மென்றலை கிளைக்கும்
 அண்ண றந்தருள் வரத்தினை யறிகலா தமர்க்கு
 நண்ணி னாய்நினை விடுத்தன னடமதி யென்றான்
 பண்ணும் வேள்வியின் பயனிதென் றறிந்தருள் பகவன்.

(இ - ள்.) இளைஞனே ! நீ எண்ணிறந்த காலங்கள் ஈண்டுநின்று அறுத்துவீழ்த்தினும் என்றலைகள் மீண்டும் மீண்டும் முளைத்தெழும். இங்ஙனம்எழுக என்று இறைவனே எனக்கு வரந்தந்தருளினன். இத்தகைய வரமுண்மையை நீ உணர்ந்து கொள்ளாமையால் என்பால் போரிடற்கு வந்தனை. நீ இளைஞன். ஆதலின் நின்னை யான் இப்பொழுது கொல்லாமல் விடுகின்றேன். நீ செல்க என்றான். இங்ஙனம் அற்ற உறுப்புகள் முளைப்பது இவனியற்றிய அறக்களவேள்வியின் பயனாகும். என்று உணர்ந்தருளிய எம்பெருமான்.

(வி - ம்.) அண்ணல் - சிவபெருமான். நீ சிறுவனாகலின் விடுத்தேன் உய்ந்துபோ என்றவாறு. மதி : முன்னிலையசை. பகவன் - முருகன்.

(518)

 நன்று கூறினை பின்றையே கூற்றநண் ணியதால்
 இன்று நின்னுயிர்க் கிழைத்தநா ளென்றலு மவுணன்