| (வி - ம்.) பராகம் - துகள். வதிதலுற்றது - ஒருசொல்; வதிந்தது. மடங்கல் - சிங்கம். (524) | | தேவ ரந்தணர் பாடின ராடினர் தெய்வக் | | | காவ லர்ந்தபன் மலர்மழை சொரிந்தனர் கணமும் | | | யாவ ருங்களி திளைத்தன ரெம்பிரான் றணந்து | | | மேவ ருந்திறற் பாசறை யடுத்துவீற் றிருந்தான். |
(இ - ள்.) அவ்வெற்றியினை யுணர்ந்த அமரரும் அந்தணரும் மகிழ்ச்சியாலே ஆடிப்பாடிக் கற்பகப்பூம்பொழிலுள்ள பல்வேறு மலர்களையும் கொணர்ந்து மழைபோன்று பொழியாநின்றனர். எம்பெருமானுடைய குழுவினரும் ஏனையோரும் மகிழ்ச்சியுடையராயினர். எம்பெருமான் அவ்விடத்தினின்றும் புறப்பட்டுப் பகைவர் புகுதற்கியலாத வலிமையுடைய தனது பாசறையின்கண் எய்தி வீற்றிருந்தருளினன். (வி - ம்.) தெய்வக்கா - கற்பகப் பூம்பொழில். தணந்து - அகன்று. திறல் - வலிமை. (525) | | சூளி கைத்தலை யிருந்தமர் நோக்கிய சூரன் | | | ஆளி மாமுகன் விழுதல்கண் டயர்த்துளான் கொல்லோ | | | நாளி ழந்துளா னோவென நனியயி்ர்த் தளவில் | | | மீளும் வேயினர் பணிந்துவீந் தானென்று விரித்தார். |
(இ - ள்.) உப்பரிகையின் மேலிருந்து இப்போர் நிகழ்ச்சியினைக் கூர்ந்து நோக்கியிருந்த சூரபதுமன், சிங்கமுகாசுரன் எம்பெருமான் தண்டாலே தாக்குற்று விழுதலைப்பார்த்து இவன் உணர்விழந்து வீழ்ந்திருக்கின்றனனோ ? அல்லது வாணாளையிழந்தனனோ ? என்று பெரிதும் ஐயுறும் பொழுதில் போர்க்கள நிகழ்ச்சிகளை ஒற்றி மீண்ட ஒருசில ஒற்றர் சூரபதுமன் அடிகளிலே பணிந்து சிங்கமுகன் இறந்தான் என்று விளம்பினர். (வி - ம்.) சூளிகை - அரமியம்; உப்பரிகை. ஆளி - சிங்கம். அயர்த்தல் - உணர்விழத்தல். அயிர்த்தல் - ஐயுறுதல். வேயினர் - ஒற்றர். (526) | | வெற்று டம்பினன் மிக்குயிர்த் தவலித்துக் கவன்றங் | | | கற்ற நீங்கியுள் ளேதுய ராறுபு சினந்து | | | பற்று மண்டங்க டொறும்பயில் படையெலா மீண்டு | | | முற்றத் தம்மினென் றெண்ணிலர் தமைமுடுக் கினனால். |
(இ - ள்.) ஒற்றர் மொழிகேட்ட சூரபதுமன் உணர்ச்சியற்ற உடலையுடையனாய் நெடுமூச்செறிந்து அழுது வருந்தி ஒருவாறு அத்துள் பத்தினின்றுந் தேறித் தணிந்தவனாய் வெகுண்டு தூதரைநோக்கி ஓடுமின் ! நம்மாற்பற்றப்பட்டுள்ள பல்வேறு அண்டங்களினும் உறைகின்ற நம்முடைய படைமுழுதும் அழைத்து வாருங்கோள் என்று கட்டளையிட்டு எண்ணிறந்த தூதுவரை விரையச் செலுத்தினன். |