பக்கம் எண் :

838தணிகைப் புராணம்

(வி - ம்.) வலம் - வெற்றி; வலிமையுமாம். பூதர் - முருகன் படைஞர். தானவர் - அசுரர். அமர்த்தனர் - போரிட்டனர்.

(533)

 தலைவ ரேற்றனர் தளர்ந்தன ரிலக்கருந் தாக்கி
 உலைவு முற்றினர் வீரரெண் மரும்பொரு துடைந்தார்
 சிலைவ லாளனுஞ் சிலர்விழக் கலக்குழி யொருங்கே
 மலைதன் முற்றலின் வலியறச் சலித்தனன் மாதோ.

(இ - ள்.) நிலைகுலைந்த பூதப்படைத்தலைவரும் போர் ஆற்றித் தளர்ச்சியடைந்தனர். இலக்கவீரரும் போர்செய்து குலைந்தனர். நவ வீரர்களுள் வைத்து எண்மரும்போராற்றிப் புறங்கொடுத்தனர். எஞ்சிய வில்வல்லுநனாகிய வீரவாகுவும், அவ்வவுணர் ஒருசிலர் மாளும்படி போர்செய்யுங்கால் அவ்வவுணர் ஒருசேரத்தன்மேல் போர் ஆற்றுதலானே வலிமைகுன்றி நெஞ்சந் தளர்வானாயினன்.

(வி - ம்.) தலைவர் - பூதகணத்தலைவர். இலக்கர், இலக்கம் என்னும் எண்ணளவினராகிய ஒரு மறவர்குழு. சிலைவலாளன் - வீரவாகு.

(534)

 கண்டு நாயகன் கார்முகம் வணக்கிநா ணோதை
 கொண்ட னன்மத குஞ்சரம் புரண்டன மணித்தேர்
 விண்டு டைந்தன விளிந்தன பரித்தொகை பல்லோர்
 எண்ட விர்ந்தன ரிறந்தனர் சிலரிடந் தோறும்.

(இ - ள்.) இங்ஙனம் நிகழ்ந்த போர்நிலையினைக் கண்டருளிய எம்பெருமான் தனது வில்லைவளைத்து நாணொலி எழீஇயினன். அவ்வொலி கேட்டதுணையே மதயானைகள் புரண்டுவீழ்ந்தன. அழகிய தேர்கள் பிளவுபட்டுடைந்தன. குதிரைப்படை இறந்தொழிந்தன. பற்பல அசுரர் நினைவிழந்து வீழ்ந்தனர். இடந்தோறும் சிற்சிலர் இறந்தொழிந்தனர்.

(வி - ம்.) நாயகன் - முருகன். நாணோதை - நாணைத்தெறித் தெழுப்பும்ஒலி. குஞ்சரம் - யானை.

(535)

வேறு

 சத்தியொ டும்புணர் தற்பர னாக்கிய தானுள முன்னுதலும்
 எத்தனை யுங்கணி கத்தில்வி ரிந்திட லென்னவி ளங்குமரன்
 வைத்தனன் றூணியில் வார்கைய ழற்சரம் வையநி றைந்தவையவ்
 வுத்தம னட்டிடல் போலவு ணப்படை யொல்லைய ழித்தனவே.

(இ - ள்.) இறைவியோடுகலந்த இறைவன் உலகத்தைப் படைத்தற்குத் தனது திருவுளத்தே நினைத்தருளிய துணையானே எண்ணிறந்த அண்டங்கள் நொடிப்பொழுதிற்குள் தோன்றி விரிதல்போன்று முருகப் பெருமான் தனது நெடிய கையினை அம்பறாத் தூணியின்கண் வைத்தருளிய மாத்திரையின், தீக்கணைகள் உலகமுழுதையும் மறைத்தன. அத்தீக்கணைகள், அச்சிவபெருமான் அழிக்குங்காலத்தே ஒருநொடிப்