பக்கம் எண் :

சீபரிபூரண நாமப் படலம்839

பொழுதிலே அனைத்தையும் அழித்திடுதல் போன்று அவுணப்படைகளை விரைந்து அழித்தொழித்தன.

(வி - ம்.) தற்பரன் - சிவன். கணிகம் - நொடிப்பொழுது. இளங்குமரன் - முருகன். வார் - நெடிய. நிறைந்தவை - வினையாலணையும் பெயர்.

(536)

 குடர்கொழு வென்புவ ழுக்குவ ழும்புகொ ழுங்கறை மூளைதடி
 தொடருந ரம்பிவை வேறுபி ரிந்துது வன்றுவ தன்றிமுழு
 துடல்களை நாடரி தென்னவொ றுத்தன வும்பர்பி ரான்கணைகள்
 இடமுள தண்மவெ னப்பிற வண்டமி ருந்தவு முற்றினவே.

(இ - ள்.) தேவதேவனாகிய முருகப்பெருமானுடைய அம்புகள் அச்சூரபதுமன் படைஞரையெல்லாம் அப்போர்க்களத்தே குடரும் கொழுவும் என்பும் வழுக்குதலுடைய நிணமும், கொழுவியகுருதியும் மூளையும் தசையும் பின்னிய நரம்பும் ஆகிய இவை வெவ்வேறு பிரிந்து குவிந்த குவைகளையன்றி முழுமையான உடல்களை ஆராய்ந்துங் காண்டல் அரிதென்று கூறும்படி அழித்தன. இவ்வமயத்தே யாம் இனிப் போர்க்களத்தே புகுதற்கு இடமுளதாயிற்று என்று மகிழ்ந்து வேறு அண்டங்களிலே இருந்த அவுணப்படைகள் விரைந்துவந்து வளைத்துக்
கொண்டன.

(வி - ம்.) கொழு - கொழுப்பு. வழுக்குவழும்பு : வினைத்தொகை. வழும்பு - நிணம். முன்னர் இடம்பெறாமல் பிற அண்டங்களிலே சென்றன ஆகலின் இடமுளதண்ம என அவை வந்தன என்றவாறு.

(537)

 முந்தினு மிக்கபெ ரும்படை கண்டுமுன் னோன்வல வாவிரதம்
 அந்தர மாதிர மெங்கணு முந்தென வையென வெண்ணிலுரு
 மைந்தனெ டுத்தும லைந்தன னென்னவ ளிக்கிறை யேவல்செயச்
 சிந்தினன் வார்கணை சிந்தின வெங்கணுஞ் சேனையு டற்றுணியே.

(இ - ள்.) முற்படவந்த படையினுங்காட்டில் மிக்கனவாகிய பெரும்படை வரவினை எம்பெருமான் கண்டருளி, "வலவனே! இனி நந்தேரினை வானத்தினும் எட்டுத்திசைகளினுமாக எவ்விடத்துஞ் செலுத்துவாயாக" என்று பணித்தருள, அங்ஙனமே செய்குவல் என்று அத்தேர்வலவனாகிய காற்றுக்கடவுள் "முருகப்பெருமான் எண்ணற்ற திருவுருவங்களைப் படைத்துக்கொண்டு யாங்கணும் நின்று போர் செய்தனன்" என்று கண்டோர் கருதும்படி இறைவன்பணியை இயற்றினான். எம்பெருமானும் நெடிய அம்புகளை அங்கிங்கெனாதபடி யாண்டுமெய்தனன். எங்கெங்கும் அவ்வசுரருடைய உடற்றுண்டங்கள் வீழ்ந்தன.

(வி - ம்.) முன்னோன் - முருகன். வலவா : விளி. மாதிரம் - திசை. என்று கண்டோர்கருத என்க.

(538)

 மீட்டுமி ரும்படை மேவநெ டுங்கணை விட்டுவி யன்வழியில்
 மாட்டிவ ழக்கம றுத்துல கெங்கும லிந்தவு டற்குறையின்