| | ஈட்டம றிந்துக னன்றுவி ழிப்பவெ ரிந்தவு டற்றொகுதி | | | ஓட்டறு சோரிவ றந்தது சூரனொ ருத்தனு நின்றனனே. |
(இ - ள்.) மீண்டும் பெரியபடை வாராநிற்ப அதுகண்ட பெருமான் நெடியகணைகளை யேவி அப்படைகளையும் இடைவழியிலே அழித்துப் பின்னரும் அவ்வழியையும் அழித்து வரவினைமாற்றி இவ்வுலகெங்கும் மிக்குக்கிடக்கும் குறைப்பிணங்களின் குவியல்களைப்பார்த்துச் சினந்து விழித்த வளவானே அவ்வுடற்றொகுதிகள் வெந்துசாம்பராயின ஓடியகுருதியும் வற்றி உலர்ந்தது. அப்போர்க்களத்தின்கண் சூரபதுமன் ஒருவன்மட்டுமே எஞ்சி நின்றான். (வி - ம்.) வியன் - அகன்ற. மாட்டி - கொன்று. ஓட்டறு - ஓடிய. சோரி - குருதி. (539) | | என்னைமு டிக்குநர் யாவரு மில்லையெஞ் ஞான்றுமிவ் வாறுடலில் | | | மன்னுவ னீயத றிந்திலை புல்லியர் மாற்றம்வி னாய்ப்பொருத | | | முன்னினை பிள்ளைமை யான்முது கீயினு மோதுவ லென்னவவன் | | | பன்னிரு தோளிறை செப்பென் தம்புப கர்ந்திடு மென்றனனால். |
(இ - ள்.) அவ்வாறு தமியனாய் நின்ற அசுரன் இறைவனைநோக்கி சிறுவனே ! இவரெல்லாம் நின்னால் அழிக்கப்பட்டனர் எனினும், என்னை அழிப்பவர் எவ்வுலகத்தும் யாரும் இலர்கண்டாய். ஆதலின் யான் எப்பொழுதும் இப்படியே இவ்வுடலிலே நிலைபெறுவன். இஃதறியாது அறிவில்லாதோருடைய மொழியைக்கேட்டு நீ என்னோடு நினது பிள்ளைமதிப் பேதைமையாலே போராற்றத் துணிந்தனை. "நீ என்பால் தோல்வியுற்று முதுகுகொடுத்தோடுதல் ஒருதலையேயாயினும் இவ்வுண்மையை யான் நினக்குணர்த்துவேன்," என்றுகூற அதுகேட்ட பன்னிரு தோட்பரமன் "அசுரனே ! நினக்கு என் அம்பே விடையளிக்குங்காண்" என்றனன். (வி - ம்.) எஞ்ஞான்றும் - எப்பொழுதும். புல்லியர் - அறிவில்லார். பிள்ளைமை - பிள்ளைத்தன்மை. (540) | | என்றலும் வெஞ்சினம் வீறவி ருஞ்சிலை யேற்றிய நாணொலிசெய் | | | தன்றிய சூரனெ திர்ந்தன னேர்ந்தழி வுற்றனர் பூதரெலாம் | | | துன்றுமி லக்கரும் வீரரு நேர்ந்துதொ டுத்தனர் வான்பகழி | | | நின்றவை மாற்றிநெ டுஞ்சிலை தேருநெ ரித்துமெ யுய்த்தனனே. |
(இ - ள்.) என்று பெருமான் திருவாய்மலர்ந்தருளியதுகேட்ட அளவிலே வெவ்விய வெகுளி மிக்கெழத் தனது பெரிய வில்லின்கண் ஏற்றிய நாணை ஒலிசெய்து பகைத்த அவ்வவுணன் போர் ஆற்றலுற்றனன். பூதப்படைஞர் ஒருசேர அவனை எதிர்ந்து ஆற்றாதுபுறமிட்டனர். நெருங்கிய இலக்கமறவரும் எண்மறவரும் அச்சூரன்மிசைச் சிறந்த அம்புகளை எய்தனர். சூரன் ஆண்மையொடு நின்று அவ்வம்புகளைத் தடுத்து மேலும் அவருடைய நெடியவிற்களையும் தேர்களையும் நுறுக்கி அவருடல்தொறும் அம்புகளைச் செலுத்தினன். |