பக்கம் எண் :

சீபரிபூரண நாமப் படலம்841

(வி - ம்.) வீற - மிக. அன்றுதல் - பகைத்தல். வான் - சிறந்த.

(541)

 உய்த்தச ரம்புய நெற்றியு ரங்களு ரீஇப்பெய ரத்தளரா
 மொய்த்தவி லக்கரு மெண்மரு நீங்கினர் மொய்ம்பினன் வாவியவன்
 பைத்தவிர் வையமி வர்ந்துப ரன்றரு நாந்தகம் வாங்கிவளை
 கைத்தல வில்லையி றுத்தனன் கையினெ றிந்தவ னோச்சினனே.

(இ - ள்.) ஏவிய கனைகள் தோளினும் நெற்றியினும் மார்பினும் புக்கு ஊடுருவிப் போதலானே தளர்ச்சியுற்றுச் சூரனை மொய்த்துப் போர்செய்த இலக்கமறவரும் எண்மறவரும் புறமிட்டனர். அதுகண்ட வீரவாகு பரந்தொளிராநின்ற அவ்வசுரன் தேரிலே தாவிச்சென்று அவனுக்கு இறைவன் அருளிய வாட்படையையும் கவர்ந்துகொண்டு மேலும் அவனுடைய கையின்கண்ணதாகிய வளைந்த வில்லையும் முறித்தனன். அவ்வசுரன் வீரவாகுவைக் கையாற்புடைத்து வானத்தே தூக்கி
எறிந்தனன்.

(வி - ம்.) உரீஇ - உருவி. தளரா - தளர்ந்து. மொய்ம்பினன் - வீரவாகு. அவன் - ஆச்சூரன். பைத்து - பரவி. வையம் - தேர். நாந்தகம் - வாள்.

(542)

 வானெறி மொய்ம்பன யர்ச்சித விர்ந்துதன் வள்ளலை யண்மினனால்
 தானவன் வேறொரு வார்சிலை கொண்டுச ரம்பல கோடிவிட
 மேனிலை யும்பர்கள் வைப்பும்வி றந்தகி ரித்தொகை யும்விரிநீர்ப்
 பேனநெ டுங்கட லும்புவி யும்பிற வுந்தப மூடினவால்.

(இ - ள்.) வானிலே எறியப்பட்ட வீரவாகு இளைப்பொழிந்து தன் வள்ளலாகிய முருகப் பெருமானை அணுகினன். இனிச் சூரபதுமன், மற்றொரு நெடியவில்லை எடுத்து வளைத்துப் பற்பல கோடி அம்புகளை எய்தனன். அவ்வம்புகள் மேலே நிலையுதலுடைய தேவருலகங்களையும், மிகுந்த மலைத்தொகுதிகளையும் நுரையுடைய நெடிய கடல்களையும் நிலவுலகத்தையும் பிறவற்றையும் கெடும்படி மறைத்தன.

(வி - ம்.) எறி - எறியப்பட்ட. அயர்ச்சி வானில் எறியப்பட்ட மையாலே தவிர்ந்தது என்றவாறு. தானவன் - அசுரன். விறந்த - மிகுந்த. பேனம் - நுரை. தப - கெட. ஆல் : ஆசை.

(543)

 கோற்றொடி கொன்றைமி லைத்தவர் வாள்விழி கொம்மென மூடுமிருள்
 தோற்றுநு தற்கணி ரித்தென வாளிது ரந்தவ னெய்தகணை
 மாற்றிய வன்மிசை யெண்ணில வேவினன் வள்ளல றுத்தவைமேல்
 வீற்றுநெ டுங்கணை விட்டனன் சூரன்வி ளைத்தன ரிம்முறையால்.

(இ - ள்.) உமாதேவியார் கொன்றைமாலை சூடிய சிவபெருமானுடைய ஒளிமிக்க திருக்கண்களைப் பொள்ளென மறைத்தலாலுண்டான இருளை அப்பெருமான் படைத்துக்கொண்டு விழித்த நெற்றிக்கண்ணொளி