பக்கம் எண் :

842தணிகைப் புராணம்

நொடிப் போதில் அழித்தொழித்தாற்போன்று முருகப்பெருமான் நொடிப்பொழுதிலே கணைகளை ஏவி அச்சூரபதுமன் ஏவிய கணைகளை மாற்றியழித்து அச்சூரன்மேலும் எண்ணிறந்த அம்புகளை ஏவினன். அச்சூரபதுமனும் அக்கணைகளை அறுத்துப் பெருமான்மேலும் பல்வேறு நெடியகணைகளை ஏவினன். இம்முறையாகவே இருவரும் போர் செய்யாநின்றனர்.

(வி - ம்.) கோற்றொடி : அன்மொழித்தொகை. கொம்மென : விரைவுக்குறிப்பு. வீற்று - வேறுபாடு.

(544)

 அறுத்துவி ழுஞ்சர மார்கலி வெற்பகன் மண்ணிட மெவ்விடனும்
 மறைத்துநி மிர்ந்தன வாவயி னேர்வரு வாளிய றுத்தவுணன்
 குறித்திறை வன்கொடி யைத்துகள் கண்டுகு றித்தொலி சங்கம்விரைந்
 துறுத்தினன் மீட்டுமு லப்பில்ச ரங்களொ ராறுமு கத்திறைமேல்.

(இ - ள்.) இருவர்களானும் அறுபட்டு வீழ்கின்ற கணைகள், கடலும் மலையும் அகன்றநிலனும் ஆகிய எல்லாவிடங்களையும் மறைத் துயர்ந்தன. அப்பொழுது சூரபதுமன் தன்மேல் வருகின்ற கணைகளை மாற்றி, மேலும் குறிக்கொண்டு முருகப் பெருமானுடைய கொடியைத் துகள்படச்செய்து தனது மறச்சங்கினையும் முழக்கி விரைந்து மீண்டும் எண்ணத் தொலையாத அம்புகளை ஆறுமுகப் பெருமான்மேல் எய்தனன்.

(வி - ம்.) ஆர்கலி - கடல். வெற்பு - மலை. குறித்து - குறிக்கொண்டு. சங்கம்குறித்து - சங்கைமுழக்கி. ஒலிசங்கம் - வினைத்தொகை.

(545)

 நேர்ந்தச ரங்களி றுத்தவன் வையநி றுத்தநெ டுங்கொடியை
 ஈர்ந்துக டற்கணி டக்கணை சிந்தின னெம்பெரு மானதனை
 ஓர்ந்துயர் பானுகம் பன்வளை யாயிர மூதினன் மால்வளையும்
 சேர்ந்துமு ழங்கிய தண்டமெ லாமொலி தேங்கிய தேங்கவுயிர்.

(இ - ள்.) எம்பெருமான் தன்னெதிரே வந்த கணைகளை முறித்து மாற்றி அச்சூரபதுமன் தேரின்மேல் நிறுத்திய நெடியகொடியை அரிந்து கடலிலே கொடுபோய் வீழ்த்தும்படி ஒருகணையை ஏவினன். அதனை உணர்ந்து பானு கம்பன் தனது ஆயிரம் வாய்களினும் ஆயிரஞ்சங்குகளை வைத்து ஒருசேர முழக்கினன். அவற்றோடு திருமாலுடைய சங்கும் சேர்ந்து முழங்கிற்று. அம்முழக்கத்தானே உயிரினமெல்லாம் அஞ்சி ஏங்கும்படி எல்லா அண்டங்களினும் ஒலியே நிரம்பிற்று.

(வி - ம்.) வையம் - தேர். பானுகம்பன் - சிவபெருமான் திருவோ லக்கமண்டபத்தே சங்குமுழக்குமொருவன். இவனுக்கு ஆயிரந்தலையுள என்ப.

(546)

 புங்கவர் நம்மிறை தேரினி ருங்கொடி யாதியெ னப்புகல
 அங்கிபு றஞ்சிறை வாரண மாய்நனி யார்த்தனன் றேவரெலாம்