ணுள்ள எருமைக்கடாக்கள், குறிஞ்சிநிலத்தின்கணுள்ள யானையினங்கள் பகடென்று தம்பெயரைக் கோடல் என்ன காரணமென்று சீற்றங்கொண்டு அம்மதமலையாகிய யானைகள் வற்கட மடைய மலையின்கட் சென்று மலைவாழை முதலியவற்றை அழிக்கும் அழகானது அவ்விடத்து நிறைந்திருக்கும். (வி - ம்.) வரைத்தலை வேழம் - மலையிடத்துள்ள யானை. வேழம் - கரும்பு. வீத்து - அழித்து. பகடு - யானை; எருமை. வறம்கூர் - வற்கடமிக. கல் - மலை. "கற்பாடழித்த கனமாமணித் தூண்செய் தோளான்" எனும் சிந்தாமணிச் செய்யுனானறிக. இருங்கடா - பெரிய எருமைக் கடா. வாழி - அசை. (157) | | | பரந்த பன்னதி மடுப்பினு மமைவுறாப் | | பாழகட் டினைக்கார்கோள் | | இரங்க மாலைவெள் ளருவியாற் குழிப்பமேக் | | கெழுவரை வரைதன்னைத் | | தரங்க நீள்கரத் திரள்களாற் சிதர்படத் | | தடவுரத் தெதிர்ந்தோச்சிச் | | சுரந்த வோகையிற் பெருங்கட றெழித்திடுந் | | தொடர்புள தொருபாங்கர். |
(இ - ள்.) (குறிஞ்சிநிலத்தின்கண்) மேலேயுள்ள வரையானது விரிந்த பல யாறுகள் நிறையினும் நிறையாத பாழாகிய கடல் வயிற்றினை அக்கடலான திரங்கும்வண்ணம் ஒழுங்காகிய வெள்ளிய அருவியாற் குழியாக்குவதும். அம்மலையை அலைகளாகிய நீண்ட கரங்களின் கூட்டத்தினால் தூளாம்படி பெருமைபொருந்திய மார்பினிடத்து எதிர்த்து ஓச்சியெறிதலாலுளதாகிய மகிழ்ச்சியாற் பெரிய கடலானது முழக்குவதும் ஆகிய சம்பந்தம் ஒருபக்கத்துள்ளது. (வி - ம்.) அமையுறா - நிறையாத. அகடு - கடல்வயிறு. கார்கோள் - கடல். "கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை" என்னும் திருமுருகாற்றுப்படை யடியானுணர்க. மாலை - ஒழுங்கு. குழிப்ப - குழியாக்குவன. மேக்கு - மேல் அவ்வரைதன்னையென்று அகரச் சுட்டு வருவிக்க. சிதர் - தூள். ஓச்சி - எறிந்து. தெளித்திடும் - முழக்கியிடும். (158) | காந்து நாகத்தின் மணிகளும் வயிரமுங் | | கனையரு வியினோங்கல் | | ஏந்தி நீள்கடற் களிப்பவீர்ம் புணரியு | | மிலங்குவித் துருமத்தோ | | டார்ந்த நித்திலந் திரைகளி னடுக்கலுக் | | களித்திரு பெருவேந்தர் | | சேர்ந்த பொதுசெய் வரிசைகள் காட்டுமத் | | திருவுமா யிடைமன்னும். |
|