| (வி - ம்.) கோல் - அம்பு. நீல் - நீலநிறம். நெற்றி - முன்னணி. (549) | | உலகுறு காரிய முண்மையி னாலுத னுக்கொரு காரணனும் | | | மலமும னைத்தும தித்திடல் போல்விடு வாளிதி ரிந்திடலால் | | | நிலவியி ருஞ்சம ராடுந ரென்றுநி னைப்பத லாலவர்தம் | | | இலகுரு வுஞ்சம ராடுறு செய்கையும் யாரும றிந்திலரால். |
(இ - ள்.) உலகம் இடையறாது இயங்குதலான், இவ்வியக்கத்தைச் செய்யும் காரணன் ஒருவனும் மலமுதலியனவும் இருத்தல் ஒருதலை என்று கருதலளவையாற் றுணிதல்போன்று, சூரபதுமனும் ஆறுமுகப் பெருமானுமாகிய இருவரும் விடுகின்ற கணைகள் யாண்டும் திரிவதனாலே பொருந்திநின்று பெரிய போரினை விளைப்போர் உளர்என்று கருத லளவையாற் றெளிதலன்றி அவ்விருவருடைய விளக்கமுடைய உருவத்தையும் அவர் ஆற்றும் போர்ச் செயலையும் அமரர் முதலிய யாவரும் காட்சி யளவையாற் கண்டிலர். (வி - ம்.) உலகுறுகாரியம் - உலகம் எய்துகின்ற தொழிற்பாடு. உதனுக்கு - இதற்கு. மதித்திடல் - கருதித்தெளிதல். சமர் - போர். (550) | | மழுப்படை கப்பண நேமிகொ ழுப்படை வச்சிரம் வேல்கதைவார் | | | எழுப்படை சூலமு மற்றும னந்தமி டைக்கண்வி ராய்க்கடவ | | | விழுப்பக ழித்திர ளாலவை சிந்திவி ரைந்துழ றேரொடுமா | | | முழுப்புவி வீழம டித்தனன் முன்னவன் மூவுல கும்புகழ. |
(இ - ள்.) மழு, கப்பணம், சக்கரம், கொழு, வச்சிரம், வேல், தண்டு, நெடிய எழு, சூலம் என்னும் இவையும் இன்னோரன்ன பிறவுமாகிய படைக்கலங்கள். எண்ணிறந்தவற்றை இடையிடையே கலந்து அச்சூரபதுமன் செலுத்திக் கடவ இப்படைக்கலங்கள் அனைத்தையும் முதல்வனாகிய பெருமான், சிறந்த கணைகளாலேயே அழித்து மேலும் விரைந்து சுழலாநின்ற அந்தச் சூரபதுமன் தேரோடு குதிரைகளும் பெரிய நிலத்திலே வீழும்படி அழித்து மூன்றுலகோரும் புகழும்படி வீழ்த்தியருளினன். (வி - ம்.) அனந்தம் - எண்ணிறந்த; முழுமையுடையபுவி என்க. முன்னவன் - முருகன். (551) | | தோழி யச்சிலை யோடவு ணர்க்கிறை திண்புவி நின்றுகணை | | | ஆரவி டுத்தன னண்ணலு நண்ணிய றுத்தவன் வார்புயமேல் | | | வீரநெ டுங்கணை யாயிர மேவினன் வீடின பட்டவைகோல் | | | சூரனி ராயிர மேவினன் வேணெடுந் தோளுற நீறினவே. |
(இ - ள்.) தேர் இங்ஙனம் அழிதலானே அவுணர் வேந்தன் வில்லோடு வறுநிலத்தே நின்று கணைகளை நிரம்பத் தொடுத்தேவினன். எம்பெருமானும் அவனெதிர்சென்று அவையிற்றை அழித்து மேலும் |