| | அஞ்ஞையி ழந்தசி றாரென நொந்தய னாதிவிண் ணோர்களெலாம் | | | கைஞ்ஞெரி கொண்டுக வன்றனர் மால்கறை கண்டம்வி டுத்துவரும் | | | மஞ்ஞைய னாற்றல றிந்திலி ரின்னும்வ ருங்கடி தென்றமரர் | | | மொய்ஞ்ஞம லித்தொகை சூழ்ந்தம கேந்திரஞ் சூரொடு முன்னினனால். |
(இ - ள்.) தாயை இழந்துவிட்ட சிறுவர்போன்று பிரமன்முதலிய தேவரெல்லாம் மனம்நொந்து கைகளை நெரித்து வருந்தாநின்றனர். அது கண்ட திருமால் அத்தேவர்களை நோக்கி முழுமுதல்வனாகிய சிவபெருமானே தனக்குரிய நீலகண்டத்தை மறைத்தருளி மயில்வாகனப் பெருமானாகி நம்மைப் பாதுகாத்தற்பொருட்டு எழுந்தருளினன், இவ்வுண்மையறியாமையான் அப்பெருமானுடைய வரம்பிலாற்றலை நீயிரெல்லாம் இன்னும் அறிகிலீராய் இங்ஙனம் வருந்துகின்றீர். அஞ்சாதே கொண்மின்! எம்பெருமான் விரைந்து வெற்றியோடு மீண்டு வருகுவன் என்று தேற்றாநின்றனன். மொய்த்த மயிற்றிரள் சூழ்ந்துள்ள சூரபதுமனுடைய மகேந்திர நகரத்திற்குச் சூரபதுமனைத் தொடர்ந்து நம்மிறைவனும் சென்றனன். (வி - ம்.) கடிதுஎன்ற அமரைத் தேற்றினன் என ஒரு சொல் வருவித்து முடிக்க. ஞமலி - நாயுமாம். ஆல் : அசை. (561) | | ஆனவு ணப்படை யுள்ளன யாவும டர்ந்தெதி ரக்குமரன் | | | ஈனழி கென்றுந கைத்தனன் வெண்பொடி யின்றிட ராயினவே | | | ஊனர சாள்பவ னோக்கியு ளந்தளர் வுற்றொரு சூழ்ச்சியனாய் | | | வானவ ரஞ்சிய மாயையை முன்னினன் மற்றவண் முன்னினளால். |
(இ - ள்.) அம்மகேந்திர நகரத்தேயுள்ள அசுரப்படைகள் அனைத்தும் ஒருசேரச் செறிந்து போர்க்கெழா நிற்பக் குமரக்கடவுள் அவற்றை இவ்விடத்திலேயே அழிக என்று திருவுளத்தேகருதி நகைத்தருளினன். அவ்வளவிலே அப்படைகள் அனைத்தும் வெந்து சாம்பர்த் திடலாயின. இந்த நகரத்திருந்து அரசாட்சி செய்பவனாகிய சூரபதுமன் இந்நிகழ்ச்சியினைக் கண்டு நெஞ்சந் தளர்ந்து ஒரு சூழ்ச்சி செய்ய நினைத்தவனாய் அமரர்கள் அஞ்சுதற்குக் காரணமான மாயையை மனதினுட் சிந்தித்தனன். சிந்தித்தலும் அம்மாயையும் அவன் முன்னர் வந்து நின்றனள். (வி - ம்.) ஆன் - அவ்விடம். ஈண் - இவ்விடம். ஊன் - உவ்விடம்; மகேந்திர நகரம். (562) | | எமியையி ருந்தர சாள்வது கண்டவென் கண்களி னைந்தழியத் | | | தமியையி ருந்தனை பின்னும மர்த்தற விர்ந்திலை யாவர்கொலாம் | | | இமிழுறு பாலவிழ் கிற்பினி றுக்குந ரீங்கெனை முன்னுமஃ | | | துமிழ்மதி யென்றனண் மாய்படை யாகுக தில்லென வொன்றுசொல்வான். |
(இ - ள்.) அங்ஙனம் வந்த மாயை சூரபதுமனை நோக்கி அந்தோ! எம்மையுடைய வேந்தனே ! நீ நின்சுற்றத்தோடு ஈண்டிருந்து அரசாள் வதனைக் கண்டுகளித்த என் கண்கள் வருந்தியழும்படி நீ இங்ஙனம் |