| தனித்திருந்தாய், இவ்வாறு தனித்தபின்னரும் போர் ஆற்றுதலையும் விட்டிலை. உலகத்தின்கண் யாரே, ஆக்கத்தைச் சேர்க்கும் ஊழ்உலந்த பின் ஆக்கமுறவல்லார்! என்னை நீ நினைந்த கருத்து யாது? அதனைக் கூறுவாயாக! என்றனள். இறந்துபோன என் படைகள் மீண்டும் எழுக! என்றனன். அதுகேட்ட மாயை அதற்கு ஓருபாயங் கூறுகின்றவள். (வி - ம்.) எமியை - எம்மையுடையை. தமியை - ஒருவனாய். அமர்த்தல் - போராற்றுதல். மதி : முன்னிலையசை. தில் : அசை. விழைவுப் பொருளது. (563) வேறு | | திமிதி மிங்கில கிலந்திரி புறக்கட லொருபால் | | | அமிழ்த சீதமந் தரவரை யுளதஃ தடுப்பின் | | | நிமிரு நின்பெருஞ் சேனையென் றகன்றன ளுயிர்கள் | | | துமிம டங்கன்மேல் கொண்டனன் றூண்டினன் மணித்தேர். |
(இ - ள்.) திமி, திமிங்கிலகிலம் என்னும் பெரிய மீன்கள் வாழுதற் கிடமான பெரும்புறக்கடலின்கண் ஒருசார் அமிழ்தசீதமந்தரம் என்னும் பெயரையுடைய மலையொன்றுளது. அம்மலை ஈண்டு வந்துறின் இறந் தொழிந்த நின் பெரியபடைகள் அனைத்தும் உயிர்த்தெழும் என்று கூறிச் சென்றனள். உயிர்களை அழிக்குமியல்புடைய சிங்கத்தின் பிடரி லேறிக்கொண்டு அச்சூரபதுமன் அம்மலையைக்கொணர்தற்கு அழகிய தொரு தேரைச் செலுத்தினன். (வி - ம்.) திமி - பெருமீன். திமிங்கலம் - கடலுள்வாழும் மீன்களில் மிகப் பெரிய மீன். நிமிரும் - உயிர்பெற்றெழும் என்க. துமிமடங்கல் : வினைத்தொகை. (564) | | ஞாலந் தன்னுறுப் பாக்கிய நாமத்தேர் குறுகி | | | மூலந் தன்னொடு மகழ்ந்துமுன் னலுமுந்து கால்பட் | | | டால முண்டவன் றாருகத் தாடலி னயர்ந்தோர் | | | பால ணங்குற வெழுந்தென வெழுந்தநாற் படையும். |
(இ - ள்.) இந்திரஞாலம் என்னும் பெயரையுடைய அத்தேர் சென்று அவ்வமிழ்தசீத மந்தரமலையை வேரோடும் அகழ்ந்து கொணரலும் அம்மலையுந்திய காற்றுப்பட்டவளவிலே, இறைவன் தாருகாசுரனோடு போர்செய்த காலத்தே இறந்துபோன படைகள் விதியும்வருந்தும்படி உயிர்பெற்று எழுந்தாற்போன்று நால்வகைப் படையும் உயிர்பெற்று எழா நின்றன. (வி - ம்.) ஞாலந்தன்னுறுப்பாகிய நாமம் - இந்திரஞாலம் என்பதாம். மூலம் - வேர். கால் - காற்று. தாருகம் - தாருகாசுரன். பால் - ஊழ்.(565) | | மற்றை யண்டநின் றிறுத்தவிவ் வண்டத்தின் மலிந்த | | | முற்று முய்ந்தன குச்சென மொழியுல கேழும் |
|