| | செற்றி நின்றன மூடுதெண் கடலினுட் காஞ்சி | | | உற்ற வாறெனப் பூதர்வீ ரர்களுமுள் ளானார். |
(இ - ள்.) பிற அண்டங்களினின்று வந்தனவும் இவ்வண்டத்திலேயே மிக்குள்ளவும் ஆகிய எல்லாப் படையும் உயிர்பெற்றெழுந்தன. ஏழுலகும் தமக்குறைதற்குப் போதாத குடில்களே என்று கண்டோர் கூறும்படி யாண்டும் செறிந்துநின்றன. ஊழிக்காலத்தே உலகைமூடும் தெள்ளிய கடலினூடே காஞ்சிமாநகரம் இருந்தாற் போன்று பூதர்களும் வீரர்களும் அப்படையகத்தே அகப்பட்டிருந்தனர். (வி - ம்.) குச்சு - சிறுகுடில். செற்றி - செறிந்து. (566) | | முந்து வாழ்க்கையின் விழைவினி யொழிந்தனம் வேண்டா | | | இந்த யாக்கைதப் புதறவப் பேறென விமையார் | | | நொந்து வண்டுதே னுண்கொசு கெனவுரு மாறி | | | அந்தி னீங்கின ரிரிந்தனர் மலைமுழை யடைந்தார். |
(இ - ள்.) தேவர்கள் இனியாம் முன்பு நிகழ்த்திய வாழ்க்கையின் பாலுள்ள அவாவினை விட்டொழித்தேம். அவ்வாழ்க்கை எங்கட்கு வேண்டுவதின்று. யாம் இதுபோழ்து கொண்டுள்ள இவ்வுடல்தப்புதலே முன்செய்த தவப்பயன் ஆகும் போலும் என்று மனம்வருந்தி வண்டும் தேனும் நுண்ணிய கொசுவும் ஆக உருவம்கொண்டு அவ்விடத்து நின்றும் அகன்றுபோய் மலைக்குகைகளினூடே புகுந்தனர். (வி - ம்.) இமையார் - தேவர். அந்தில் - அவ்விடத்தில் அசைச் சொல்லுமாம். தேன் : வண்டுகளில் ஒருவகை. (567) | | அரிமு கத்தவன் கதிர்ப்பகை யங்கிமா முகவன் | | | பரிவின் மைந்தர்மூ வாயிரர் பின்னவன் பலரும் | | | பெரிது மொகைகொள் சூரனை வணங்கினர் பெரும | | | புரிதும் போரினை யாமெனப் போர்த்தன ரொருங்கு. |
(இ - ள்.) சிங்கமுகன், கதிர்ப்பகைவன், தீமுகன் அன்புடைய மக்கள் மூவாயிரர் என்னுமிவரும் ஏனையோர் பலரும் ஒருங்கேவந்து மிகவும் மகிழ்ச்சியுடையோனாய் வீற்றிருந்த சூரபதுமனை வணங்கிப் பெருமானே. யாங்கள் மீண்டும் சென்று போராற்றுவேம் என்று கூறி விடைகொண்டு முழுதும் வளைத்துக் கொண்டனர். (வி - ம்.) பெரிதும் - மிகவும். ஓகை - உவகை. பெரும - விளி. (568) | | படையெ டுத்திடு முணர்வின்றிப் பாரிடர் நின்றார் | | | மிடையும் பாரிடத் தலைவர்கள் வீரமுற் றழிந்தார் | | | தொடையி லக்கருந் தொலையுங்கொ லோவென வயிர்த்தார் | | | உடையு நெஞ்சினை வலியுறுத் தூக்கினர் வீரர். |
|