பக்கம் எண் :

சீபரிபூரண நாமப் படலம்851

(இ - ள்.) படைக்கலன்களைத் தாங்கிப் போர்செய்யும் உணர்ச்சியையே இழந்து பூதர்கள் வாளாநின்றனர். செறிந்த அப்பூதத்தலைவர்கள் தமது மறப்பண்பு முழுதும் அழியப்பெற்றார். மாலையணிந்த இலக்கமறவரும் இப்படை மீண்டும் முருகப்பெருமானால் அழிக்கப்படுமோ? என்று ஐயுறாநின்றனர். இவ்வாறு உடைந்த நெஞ்சத்தை ஊக்குவித்துக்கொண்டனர் வீரர்யாவரும்.

(வி - ம்.) பாரிடர் - பூதர். முற்றும் எனல் வேண்டிய முற்றும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. தொடை - மாலை. தொலையுங்கொல் - தொலைக்கப்படுங்கொல்.

(569)

 வாழி காங்கெய னனைத்தையு மனத்திடைக் குறித்தான்
 ஊழி நாயகன் படையினைத் துரந்தன னோங்கிப்
 பூமி யாக்கிமீண் டதுபுரத் தெஞ்சினார் போலச்
 சூழி யானையந் தொகையுடைச் சூரனை விடுத்து.

(இ - ள்.) வாழ்க ! எம்பெருமான் இந்நிகழ்ச்சிகளை எல்லாம் திருவுளத்திடைக் குறிக்கொண்டனன்; உருத்திரப்படையை அப்படையின்மே லேவியருளினன். அப்படை உயர்ந்துபோய் முகபடாமுடைய யானைப்படையையுடைய சூரபதுமன் ஒருவனைமட்டும் விட்டு ஏனைப் படைகள் அனைத்தையும் திரிபுரத்தே மாண்ட அசுரர்களைப் போன்று சாம்பராக அழித்தொழித்து
மீண்டது.

(வி - ம்.) வாழி - நூலாசிரியர் இறைவனை வாழ்த்துகின்றனர். இனி - அசையெனினுமாம்.

(570)

 தேரி ருந்தமந் தரமுமாங் கேசிதர் பட்ட
 தோரு நாயக னிழந்தவ ளுவன்வரக் கனவி
 ஆரு மின்பிடை விழித்தென வவலமிக் கெய்திச்
 சூரன் வேளையுந் தனிமைசெய் வாமெனத் துணிந்தான்.

(இ - ள்.) இந்திரஞாலத் தேரின்கண் இருந்த அமிழ்த சீதமந்தர மலையும் அவ்விறைவன் படைக்கலத்தானே சிதறிப்போயிற்று. சூரபதுமன், கணவனை இழந்தாளொருத்தி அக்கணவன் மீண்டுவருவதாகத் தன் கனவிலே கண்டு அக்கணவனோடு நுகர்கின்ற இன்பப் பொழுதிலே விழிப்புற்று அஃது கனவெனவுணர்ந்து வருந்தினாற்போன்று மிகமிக வருத்தமெய்தி, என்னை இவ்வாறு தனிமைசெய்த அம்முருகவேளை யானும் தனிமையுறச் செய்வேன் என்று துணிந்தான்.

(வி - ம்.) சிதர் - துகள். உவன் - அவன். கனவி - கனவுகண்டு.

(571)

வேறு

 இந்திர ஞாலம்வி டுத்தன னண்மியி ராயிரம் வெள்ளமோ டேனோர்தம்
 சிந்தைம யக்குபு தெவ்வியெ ழுந்துதி ணிந்துய ரண்டமு கட்டெய்தி
 அந்திலி ருந்தது வேலவ னோக்கியொ ரம்புவி டுப்பவ டுத்தீர்த்து
 வந்தது குப்புற லுற்றனர் மண்ணிடை வன்னமி கும்வய வோர்யாரும்.