பக்கம் எண் :

சீபரிபூரண நாமப் படலம்853

ஆயிரம் அம்புகளைச் செலுத்தினன். மேலும், பெரிதும் கொல்லுத லுடையதும் அழவற்றதுமாகிய வச்சிரப்படையையும் ஏவாநிற்ப அவ்வச்சிரம் ஒளிவீசும் அம் முத்தலைவேலினை விடாமல் கவர்ந்துகொண்டு மீள அவ்விரண்டனையும் ஒருசேரத் தனது திருக்கரத்திலே ஏற்றருளி, சூரன் ஊர்தியாகிய சிங்கம் மாளும்பொருட்டு அதனைக் கிழித்தெழும் படி அதன் நெற்றியிலே இரண்டாயிரம் அம்புகளைச் செலுத்தினன்.

(வி - ம்.) ஈசன் - சிவபெருமான். முச்சிகைவேல் - சூலம். ஆசுகம் - அம்பு. அக்கரம் - அழிவற்றது. உடங்கு - ஒருங்கே. கேசரி - சிங்கம்.

(574)

 மடங்கலி றத்தலு மாயையின் வெல்லுவ
           லென்றும தித்தும றச்சூரன்
 தடஞ்சிறை துன்றிய சக்கர வாகவு
           ருக்கொடு சாகர நீர்பொங்க
 நெடுங்கிரி யின்சிக ரம்புடை சிந்தநி
           ரைத்தரு நுண்டுக ளாய்ப்போத
 அடங்கரு வெப்பினெ ழுந்தன னார்த்தன
           னண்டக டாகமு டைந்தென்ன.

(இ - ள்.) தனது சிங்கவூர்தி மாண்டுபோயவுடன், மறமிக்க அச் சூரபதுமன் இனி இவனை யான் என் மாயையாலே வெல்லுவேன் என்று துணிந்து, பெரியசிறகுகள் பொருந்தியதொரு சக்கரவாகப்புள் வடிவங்கொண்டு, கடலின்நீர் பொங்கவும், நெடியமலைகளின் குவடுகள்பக்கத்தே சரிந்துவீழவும் நிரல்பட்டமரங்கள் துகள்பட்டுப் பறப்பவும் அடங்கு தலில்லாத சினத்தோடு வானத்தே பரந்தெழுந்து அண்டமுகடு உடைந்தது என்று கூறும்படி பேராரவாரஞ் செய்தனன்.

(வி - ம்.) மடங்கல் - சிங்கம். சக்கரவாகம் - ஒருபறவை. வெப்பு - சினம். எழுந்தனன் - முற்றெச்சம்.

(575)

 வீரர்கள் கைப்படை மூக்கின்மு ரிப்பன்வி
           ழுத்தகு பூதர்த மைக்கொத்தி
 ஆரவி ழுங்குவ னோடுவன் மீள்வன
           லைப்பனெ டுஞ்சிற கான்மான்றேர்
 போரவ னின்னண மாற்றுதல் கண்டபு
           ராந்தகன் மைந்தன்கு றிப்பால்வெள்
 வாரண வேந்தனை நோக்கின னுய்ந்தன
           னென்றவன் மாமயி லாய்நின்றான்.

(இ - ள்.) ஆரவாரித்த சூரபதுமன் தனது மூக்கினாலே வீரர்களுடைய கையின் கண்ணுள்ள படைக்கலன்களை முறிப்பான். சிறப்பாற் றகுதிபெற்ற பூதர்களைக்கொத்தி வயிறாரவிழுங்குவான். திசைதொறும் ஓடாநிற்பன். மீண்டு வருகுவன். நெடிய தன் சிறகுகளாலே குதிரை