| பூட்டிய தேர்களைச் சிதறச்செய்வன். அவ்வசுரன் இவ்வாறு போராற்றுதலைக் கண்ட சிவபெருமான் திருமகன் குறிப்பால் வெள்ளானையுடைய இந்திரனை நோக்கினன்; எம்பெருமானுடைய திருக்குறிப்பினையுணர்ந்து கொண்ட அவ்விந்திரன் யான் உய்ந்தேன் என்று மகிழ்ந்து பெரியதொரு மயிலாகி நின்றனன். (வி - ம்.) விழு - சிறப்பு. மான் - குதிரை. புராந்தகன் - சிவ பெருமான். வெள்வாரணம் - வெள்ளானை. வேந்தன் - இந்திரன். (576) | | தன்னொரு வாகன மென்னவி ளங்குச | | | தக்கிரு தென்னு மயிற்போத்து | | | மன்னிய தன்கொடி வாயினி றுத்துவ | | | ழங்குவ தென்னமு ழங்கிக்கண் | | | துன்னிய வார்சிறை மூக்கினு ளர்ந்துசு | | | ழன்றுந டித்தெதி ரேநிற்ப | | | முன்னவ னூர்ந்துமு டுக்கின னத்திற | | | மூர்க்கன றிந்தெதிர் கொண்டானால். |
(இ - ள்.) தனது ஒப்பற்ற ஊர்தியாகி மயில்போன்று திகழ்கின்ற இந்திரன் என்னும் அவ்வாண்மயில் நிலைபெற்ற தனதுகொடியின்கண் நிறுத்தப்பட்ட இடிபோன்று ஆரவாரித்துக் கண்(புள்ளி)கள் பொருந்திய நெடியதன் தோகையை அலகானே கோதிச் சுழன்று கூத்தாடி எதிரேவந்து நிற்ப, அதன்மேலேறி எம்பெருமான் அதனை விரையச் செலுத்தினன். அதுகண்ட அத்தீயோன் எம்பெருமான் முன் வந்து எதிர்த்தனன். (வி - ம்.) சதக்கிருது - இந்திரன். தன்கொடி. வழங்குவது - இடி. முன்னவன் - முருகன், மூர்க்கன் - சூரபதுமன். (577) | | காலினு ளர்ந்துவள் வாயினெ றிந்துக | | | றித்திற கூடுதி ரஞ்சோரச் | | | சாலவி ரண்டும மர்த்துழி நேமித | | | லைச்சிறு தோகைப றித்தெற்ற | | | நீலநி றக்குரு கெய்த்தது கண்டுநெ | | | டுங்கணை பல்லவு டம்பெங்கும் | | | வேலவனேவமெ லிந்துகு லைத்தவை | | | வீழ்த்துவி ரைந்தது விண்ணெங்கும். |
(இ - ள்.) முருகனூர்தியாகிய மயிலும் சூரபதுமனாகிய சக்கரவாகமும்; ஒன்றனைஒன்று அலகானே புடைத்தும் கறித்தும் சிறகுகளின் ஊடே குருதிகொப்பளிக்கப் போராற்றுங்கால் சக்கரவாகப்புள்மயிலின் உச்சிக் கொண்டையின் கண்ணுள்ள தோகையைப் பறித்துப் புடைத்தலானே நீலநிறமுடைய அம்மயில் இளைப்புற்றது. அதுகண்டமுருகப் பெருமான் நெடியகணை பலவற்றை அச்சக்கரவாகத்தின் உடம்பெங்கும் |