| செருக, அச்சக்கரவாகம் மெலிந்து அக்கணைகளைக் குலைத்து வீழ்த்து விரைந்து வானமெங்கும் பறந்து திரிந்தது. (வி - ம்.) கறித்து - கடித்து. அமர்த்துழி - போர்செய்யுங்கால். நேமி - சக்கரவாகம். நீலநிறக்குருகு என்றது மயிலை. குருகு - பறவைப்பொது. (578) | | ஏகுழி யேகியி ருஞ்சம ராற்றவி | | | ளைத்திறை கைக்சிலை யைக்கீழ | | | வேகமொ டண்மவி ளங்கொளி நாந்தகம் | | | வீசியி றுப்பவி ழுந்தன்றால் | | | போகுயர் புள்ளுரு மண்ணுரு வாய்ப்புரை | | | யோனுல கெங்கும்வி ரிந்திட்டான் | | | வாகையி னான்கணை யேழ்விட நீர்வடி | | | வாயது மாற்றநீ ராயுற்றான். |
(இ - ள்.) எம்பெருமான் அச்சக்கரவாகம் சென்றவிடந்தோறுஞ் சென்று பெரிய போரினைச் செய்தலானே அஃது இளைப்புற்றுப் பெருமானுடைய வில்லினை முறித்தற்கு விரைந்து அணுகாநிற்ப; எம்பெருமான் விளங்கும் ஒளியுடைய வாளைவீசி வெட்ட அப்பறவை நிலத்தின் மேல் வீழ்ந்தது. வீழ்ந்தவளவிலே நீண்டுயர்ந்த சக்கரவாகப்பறவை உருவம் மண்ணுருவாக மாற அக்கீழோன் உலகெங்கும் விரியலானான். வெற்றிவேற் கடவுள் ஏழுகணைகளை ஏவ அவை நீர்வடிவமாகி அம்மண்ணை மறைத்தன. அந்நீரை மாற்றுதற்குச் சூரபதுமன் நீர்வடிவமாக மாறினன். (வி - ம்.) ஆய் என்னும் எச்சத்தை ஆக எனச் செயவெனெச்ச மாக்குக. இருஞ்சமர் - பெரியபோர். அண்ம - அணுக. நாந்தகம் - வாள். போகு - நீண்ட. புரை - குற்றம். வாகையினான் - முருகன். (579) | | வாளிக ணூறுவி டக்கன லாயது | | | மாற்றவ யங்கெரி யாய்மொய்த்தான் | | | ஆள்கணை யாயிர மேவம ருத்துரு | | | வாயது மாற்றம ருத்தானான் | | | நீள்கணை யாயிர நூறுது ரப்பநெ | | | டும்பணி யின்குல மாயுண்டு | | | மீள்வது செய்தன வின்னண மீரிரு | | | நாள்விளி யாதுடல் வோன்பின்னும். |
(இ - ள்.) அந்நீரினை மாற்றுதற்குப் பெருமான் நூறுகணைகளை ஏவ அவைகள் நெருப்பாயின. அந்நெருப்பினை மாற்ற அசுரன் விளங்கா நின்ற நெருப்புருவாகிப் படர்ந்தான். பெருமான் அதனைமாற்றத் தான் ஆளாநின்ற ஆயிரம் அம்புகளை ஏவ அவை காற்றுருவாயின. அக்காற்றை |