பக்கம் எண் :

856தணிகைப் புராணம்

மாற்றுதற்கு அவ்வசுரன் தானும் காற்றாயினன். இறைவன் அக்காற்றினை மாற்ற நெடிய கணைகள் நூறாயிரம் செலுத்த அவை நீண்ட பாம்புகளாகி அக்காற்றினையுண்டு மீள்வனவாயின. இவ்வாறு நான்குநாள் இறவாமே போர் ஆற்றும் அவ்வவுணன் பின்னரும்.

(வி - ம்.) கனலாய், மருத்துருவாய், குலமாய் என்பவற்றுள் ஆய் என்னும் எச்சங்களைச் செயவெனெச்சமாக்குக.

(580)

வேறு

 மூவர் தேவர் யாரு மாக மொய்க்கு மோர்பு றத்தினில்
 மேவு தன்னி னத்த ராய்வி ராவு மோர்பு றத்தினில்
 பாவு கோள்க ணாள்க ளாய்ப்ப றம்பு போர்பு றத்தினில்
 தூவு கின்ற மேக மாய்த்தொ டங்கு மோர்பு றத்தினில்.

(இ - ள்.) பிரமன் திருமால் உருத்திரன் என்னும் மூன்று கடவுளரும் இந்திரன் முதலிய தேவர்களும் ஆக உருவங்கொண்டு ஒரு பக்கத்திலே வந்து மொய்ப்பான். மற்றொருபுறத்தே எண்ணிலாத அசுரராய் உருவங்கொண்டுவந்து கலப்பான். மற்றொரு பக்கத்தே பரவுகின்ற ஞாயிறுமுதலிய கோள்களாகவும் அசுவினி முதலிய மீன்களாகவும் உருக்கொண்டு படராநிற்பன். மற்றொருபக்கத்தே நீர்துளிக்கும் முகில்களாய் வரத்தொடங்குவன்.

(வி - ம்.) மூவர் - பிரமன் முதலிய கடவுளர். தன்னினம் - அசுரவினம். கோள் - ஞாயிறு முதலியன. நாள் - மீன்.

(581)

 சார தங்கள் பேயி னங்கள் சார்வி டங்கண் மாதிர
 வார ணங்கள் வாள ராவி னங்கள் வாள ரிக்குலம்
 வீர மல்கு சிம்பு ளாகி வேறு வேறி டந்தொறும்
 ஆர வெண்ணின் மாயை கொண்ட மர்த்தொ ழிற்க ணின்றனன்.

(இ - ள்.) பின்னரும் பூதங்களும் பேயினங்களும், சேராநின்ற நஞ்சுகளும் திசையானைகளும் வாள்போலும் கொடிய பாம்பினங்களும் வாள்போலும் கொடிய சிங்கக்கூட்டமும் மறமிக்க சிம்புட்பறவைகளும் ஆக உருவங்கொண்டு வெவ்வேறிடங்களிலே நிரம்ப எண்ணற்ற மாயச்செயலை மேற்கொண்டு போர்த்தொழிலிலே நிலைபெற்றனன்.

(வி - ம்.) சாரதம் - பூதம். மாதிரவாரணம் - திசையானை. வாளரா வாளரி இரண்டும் உவமத்தொகை.

(582)

 இலக்க வாளி யெம்பி ரானெ டுத்து விற்றொ டுத்தனன்
 இலக்க மாகி யொவ்வொ ரம்பெ ழுந்து சென்று வேற்படைக்
 கிலக்க மான சூரன் மாயை யாவு மட்டு மீண்டன
 இலக்கர் வீரர் பூதர் தேவர் யாவ ரும்வி யப்பவே.

(இ - ள்.) அதுகண்ட எம்பிரான் நூறாயிரம் அம்புகளை எடுத்து வில்லிலே தொடுத்தேவினன். அவை ஒவ்வொன்றும் தனித்தனி