பக்கம் எண் :

86தணிகைப் புராணம்

(இ - ள்.) நிறத்தோடுகூடிய மலர்களையுடைய கொன்றை மரத்தைச் சூழ்ந்த குருக்கத்தியினது விளங்குகின்ற கொழுந்தானது, இருண்ட மேகத்தைத் தாழச்செய்தற் கேதுவாகிய கிளைகளையுடைய மருதநிலத்துள்ள மருதமரங்களின் கூட்டத்தைப்பற்றிப் படரா, அம் மருதநிலத்தின்கண் கருப்பங்கழிகளைச் சுற்றிய நீண்ட வயலைக்கொடியின் மெல்லிய கொடிகள் சிறுதூறுகள் நெருங்கிய முல்லைநிலத்தின்கண் தோன்றிய காயாமரத்தினது பதனழிந்த பூக்களோடு கூடிய கிளைகளைத் தாவி விலைமாதருடைய எண்ணங்களை ஒத்துத் தோன்றுகின்ற
வளங்களுமாண்டுள்ளன.

(வி - ம்.) பரத்தையர் கருத்துறழ்தலாவது தான்பற்றிய ஒரு நாயகனோ டமையாது அயலாரிடத்தும் பொருட்குப் படர்தல். அது போல, குருக்கத்திக் கொடியும் வயலைக்கொடியும் தமக்குரிய நிலங்களிலுள்ள மரங்களிற் படர்தலையொரீஇ ஏனைய நிலங்களிலுள்ள மரங்களிற் படர்ந்தன என்க. மாதவிக் கொழுந்து தாவ என்க. சூழ்ந்த என்பது விகாரம். "சூழ்த்து மதுகர முரலும் தாரோயை" என்றாற் போலக் கொள்க. துறு - நெருங்கிய. ஊழ்த்த - பதனழிந்த. உறழ்தல் - ஒத்தல். வயலை - மருதநிலத்துள்ள ஒருவகைக் கொடி. 'வயலைக் கொடியின் வாடிய மருங்கின், உயவ லூர்திப் பயலைப் பார்ப்பான்' என்னும் புறநானூற்றடியா னுணர்க.

(161)

 புலவு வீசுதற் கஞ்சிநா சியைக்கருஞ்
           சாந்தினாற் புதைத்தன்ன
 சுலவு காரளி யிமிர்குமிழ் காட்டிடத்
           துறுவன மவண்மாதர்
 கலக வாள்விழி மானடற் கஞ்சுபு
           கண்கண்மூ டியதென்ன
 அலரு நீலங்கள் பகற்கழி குவிதரு
           மழகுகாட் டுவதோர்பால்.

(இ - ள்.) முல்லை நிலமாகிய பெண் (நெய்தனிலம்) புலால் நாற்றத்தை வீசுதற்குப் பயந்து மூக்கினைக் கத்தூரி கலந்த சாந்தத்தினால் மூடியதென்று சொல்லும் வண்ணம் கரிய வண்டினங்கள்சுற்றி யொலிக்கின்ற குமிழைக் காட்டாநிற்ப (அம்முல்லை நிலத்தின்கணுள்ள) இடைப் பெண்கள் காமப் போரை விளைக்கின்ற வாள்போன்ற நயனங்களால் ஆண்டுள்ள மான்களைக் கொல்லுதலைக்கண் டச்சமுற்றுக் கண்களை மூடியதென்று சொல்லும் வண்ணம் அலர்ந்த நீலோற்பல மலர்கள் பகற் காலத்தே குவிகின்ற அழகைக் கழிக்கரையானது காட்டுவ தொரு பக்க
முள்ளது.

(வி - ம்.) கருஞ்சாந்து - கத்தூரி கலந்த சந்தனம். வனங்காட்டிட வென்க. கடலை யுணர்த்தலின் ஆகுபெயர். கடலஞ்சிக் கண்களை மூடியது போல நீலங்கள் குவிதருமென்க.

(162)

 மாய னாகிய மீனந்தன் வரைப்பிடை
           வதிதரப் புகுந்தாங்கு