பக்கம் எண் :

திருநாட்டுப் படலம்87

 மேய வாழியி னெழுந்தமீன் புறவத்து
           விரைக்குறுஞ் சுனைவீழ
 ஏய பூஞ்சுனை மீனமன் னதனிட
           மெதிர்கொளக் குதித்தோடிப்
 பாய வேலைநீர்ப் புகுந்துலாய்த் திரிதரு
           பரிசுமவ் வுழித்தாகும்.

(இ - ள்.) விண்டுவாகிய மீனம் தனது நிலமாகிய முல்லையின் கட்டங்கப் புகுந்தது போலத் தான் வாசமாகப் பொருந்திய கடலினின்றும் குதித்தெழுந்த மீனானது முல்லை நிலத்தின்கண்ணுள்ள குறுஞ் சுனையின் கண் வீழாநிற்கப் பொலிவு பெற்ற அச்சுனையிற் பொருந்திய மீனானது அக் கடன்மீன் தன்னிடமாகிய கடலில் எதிர் கொள்ளும்படி குதித்துச் சென்று பரவிய கடனீரிற் புகுந்து உலாவித் திரிகின்ற தன்மையும் அவ்விடத் துளதாகும்.

(வி - ம்.) தன்வரைப்பு - முல்லை நிலம். குறுஞ்சுனை - முல்லை நிலக் கருப் பொருள்.

(163)

 கலவர் மீன்படுத் தெழுப்புசாப் பறையொலி
           கறங்கறீ தெனத்தன்னுள்
 அலவர் சாலிகொய் தண்ணுமை ததும்பொலி
           யடக்கிமே லெழநோக்கிக்
 குலவு நீணதிப் பழனமென் றுறைப்புனல்
           கூர்ப்புறக் கடலேறி
 நிலவு தன்னிடத் தடக்கிடு மயக்கமு
           நீடுவ தொருஞாங்கர்.

(இ - ள்.) மரக்கல மோட்டுபவர்கள் மீன்களை யகப்படுத்து எழுப்புகின்ற நெய்தற் பறையொலி முழங்குதல் (மக்களுக்குத்) தீங்கை யுளதாக்கு மெனக் கருதி (மருத நிலமாகிய) தன்னிடத்துக் கலப்பைப் படையை யுடைய உழவர்கள் நெற்கதிரை யறுத்தற்கு முழக்குகின்ற மத்தளத்தினின்றும் ததும்புகின்ற ஒலியானது (அச் சாப்பறையொலியை) அடக்கி மேலெழாநிற்க அதனைக் கருதி மருத நிலத்தின் கண்ணுள்ள விளங்குகின்ற நதித் துறைகளிலுள்ள நீரெல்லாம் உவர்ப்பு மிக அந்நீரைக் கடலானது அலையாலேறிப் பொருந்துகின்ற தன்னிடத் தடக்கிக் கொள்ளும் மயக்கமும் ஒரு பக்கத்து மிகுவது.

(வி - ம்.) கலவர் - மரக்கல மோட்டுவோர். படுத்து - அகப்படுத்து. சாப்பறை - நெய்தற்பறை. தன்னென்றது ஈண்டு மருத நிலத்தை. அலவர் - கலப்பைப் படையை யுடைய மருதநில மாக்கள். கூர்ப்புற - உவர்ப்புற. மயக்கம் - கலப்பு. ஏறி அலையாலேறி யென்க. நோக்கி - அதனைக் கருதியெனச் சுட்டு வருவிக்க. ஞாங்கர் - பக்கம், பழனம் - மருதநிலம், கறங்கல் - ஒலித்தல்.

(164)