(வி - ம்.) ஒருவரும் கணித்தற் கியலாது என்றவாறு. (600) | சூரனே பன்ம னென்னச் சொலத்தகு மிருவர் பன்னாள் | | ஓருட லத்தி யாரு மொருவனே யென்ன வாழ்ந்தோர் | | ஈருட லிருவ ரென்ன விருப்பரேல் விரிந்த வையத் | | தாருடங் கிருந்தோ ரூழ்வந் தடுப்புறிற் பிரியா ரம்மா. |
(இ - ள்.) சூரன் என்றும் பதுமன் என்றும் இருவராகக் கூறத்தகுந்த இருவர் ஒரோவோர் உடலின்கணிருந்து எத்தகையோரும் ஒருவனே என்று கருதும்படி பல்லூழிவாழ்ந்தவர் அவ்வூழ்அற்ற பொழுதிலேயே இரண்டுடலையுடைய இருவரே என்று யாவரும் உணரும்படி பிரிந்து இருப்பராயின் உலகின்கண் பிரிவுசெய்தற்குரிய ஊழ்வந்துற்ற காலத்துப் பிரியாமல் யாவரே கூடிவாழ்ந்தோர் ? ஒருவருமிலர். (வி - ம்.) வாழ்ந்தோர் : வினையாலணையும் பெயர். ஒருவருமிலர் என்பது குறிப்பெச்சம். அம்மா : ஈற்றசை. (601) | தேவரை யளித்துத் தீய வவுணரைச் செகுப்பச் சாபம் | | மேவிய தன்று பின்னர் விரவிய வவுணர்க் காத்துத் | | தேவரை யலைப்ப வாழ்க்கை தேகமோ டொழிந்த தென்றால் | | யாவர்கண் மாட்டு மின்னாங் கியற்றுதன் முறைமைத் தன்றே. |
(இ - ள்.) சூரனும் பதுமனும் பண்டு தேவரைப் பாதுகாத்துக் கொடிய அவுணரைக் கோறலானே சாபத்திற்கு ஆளாயினர். பின்னர் தம்மோடு கூடிய அசுரரைக் காத்துத் தேவர்களைத் துன்புறுத்தலானே தாம் பெற்றுள்ள வாழ்க்கையோடு உடலும் அழிந்தது; என்னுமிடத்தே எத்திறத்தாரிடத்தும் தீங்கிழைத்தல் முறையன்றென்பது உணரலாம். (வி - ம்.) செகுப்ப - கொல்ல. அன்று - பண்டைக்காலத்து. யாவர் - யார். இன்னாங்கு - தீமை. (602) | அடைக்கலம் புகுவிண் ணோரை யாதரித் தவுணர்க் காதக் | | கடப்பருஞ் சாபம் பெற்றார் கடவுளர்க் கிடும்பை யேய்த்துப் | | படைக்கல மிறைமேற் றூண்டிப் பழித்துமெய் வாழ்வு பெற்றார் | | விடைப்பரு வினையி னாக்கம் யாவரே விளங்கக் காண்பார். |
(இ - ள்.) தம்பால் தஞ்சம்புகுந்த தேவர்களைப் பாதுகாத்து அசுரரைக் கொல்லக் கடத்தற்கியலாத சாபம்பெற்றனர். தேவர்கட்குத் துன்பம் விளைத்து மேலும் இறைவன்மேல் படைக்கலங்களைச் செலுத்தியும் அவனை இகழ்ந்தும் மெய்வாழ்வினை எய்தினர். இங்ஙனமாகலின் அகற்றலரிய ஊழ்வினையின் செயற்கு யார்தான் விளக்கங்கூற வல்லுநர். (வி - ம்.) ஊழ்க்கு "நல்லவையெல்லாஅந் தீயவாம் தீயவும் நல்லவாம்" என்னுந் திருக்குறட் கருத்தை இச்செய்யுள் தழுவி நிற்றல் உணர்க. நல்லதற்கு நலனும் தீயதற்குத் தீமையும் என்னும் வரையறையும் ஊழின்பாலிலதாகலின் அதற்கு விளக்கங்காண்டல் இயலாதென்பதாம். (603) |