பக்கம் எண் :

சீபரிபூரண நாமப் படலம்865

 மீனுளர் கடலிற் பட்டு வெய்யவன் மறைந்தா னன்பின்
 வானவர் கந்த வேளை வரன்முறை பூசை செய்தார்.

(இ - ள்.) அசுரர் மறைந்து எவ்விடத்து உறையினும் அவரைத் தேடிக்கண்டு மெய்யறிவுடைய முழுமுதல்வனுக்கு அறிவித்து அழிப்பிப்பேம் என்று கருதிப் போவான்போன்று ஞாயிற்றுத்தேவன் மீன்கள் திரிதரும் கடலின்கண் வீழ்ந்து மறைந்தருளினன். தேவர்கள் கந்தப் பெருமானை வரலாற்றுமுறையானே வழிபாடு செய்தனர்.

(வி - ம்.) தானவர் - அசுரர். தவிர்தல் - உறைதல். துருவி - தேடி. ஞானநாயகன் - முருகன். வெய்யவன் - ஞாயிறு.

(607)

 தாவுமா னிரதந் தூண்டித் தரணிவந் தெழுத லோடும்
 ஆவயிற் கந்த வேளு மமலனைப் பூசை யாற்றித்
 தேவர்கண் முதலோர் சூழத் திருப்பரங் குன்றம் புக்கான்
 காவல்செய் மகவான் றாழ்ந்து கன்னியை மணக்க வென்றான்.

(இ - ள்.) தாவுகின்ற குதிரைபூட்டிய தனது தேரினைத் தூண்டிக் கொண்டுவந்து மறுநாள் ஞாயிறு தோன்றிய வளவிலே அத்திருச் செந்திலின்கண் முருகப்பெருமானும் சிவபெருமானை வழிபாடுசெய்து பின்னர்த் தேவர்கள் முதலியோர் தன்னைப் புடைசூழ்ந்துவரத் திருப்பரங்குன்றத்தே எழுந்தருளினன். பாதுகாத்தற்றொழிலைச் செய்யும் இந்திரன் எம்பெருமானை வணங்கித் தன்திருமகளாகிய தேவசேனையைத் திருமணம் புரிந்தருளும்படி இரந்தனன்.

(வி - ம்.) தரணி - ஞாயிறு. ஆவயின் - அவ்விடத்தே. அமலன் - சிவபெருமான். மகவான் - இந்திரன். கன்னி - தேவசேனை.

(608)

 தூதுவர் தம்மை விட்டான் றுணைமுலை மகளைக் கொண்டு
 மேதகு சசிமான் போந்தாள் விறன்முசு குந்தன் போந்தான்
 ஆதிநா யகனுந் தானே யறிந்துபல் கணங்கள் சூழ
 மாதொடும் போந்தான் வைவேல் வள்ளலும் வதுவை செய்தான்.

(இ - ள்.) இந்திரன் தூதுவரைப்போக்க மேன்மையுடைய இந்திராணி செய்தியுணர்ந்து தேவசேனையை அழைத்துக்கொண்டு திருப்பரங் குன்றத்திற்கு வந்தனள். வெற்றியுடைய முசுகுந்தனும் வந்தனன். சிவபெருமானும் இச்செய்தியையுணர்ந்து பலவாகிய சிவகணங்கள் புடைசூழ உமையம்மையாரோடு வந்துற்றனன். கூரிய வேற்படையேந்திய முருகப்பெருமானும் தேவசேனையைத் திருமணம் புரிந்தருளினான்.

(வி - ம்.) மகள் - தேவசேனை. விறல் - வெற்றி. முசுகுந்தன் - சக்கரவர்த்திகளில் ஒருவன். ஆதிநாயகன் - சிவபெருமான். மாது - உமை.

(609)

 சிலபகல் கழிந்த பின்றைத் திருப்பரங் குன்றி னீங்கி
 இலகுவிண் ணுலக மாக்கி யிந்திரற் கரசு நல்கிப்