பக்கம் எண் :

866தணிகைப் புராணம்

 பலரையுந் தத்தம் வைப்பிற் படர்தர வேவிப் பூதர்
 குலவிய வீரர் சூழக் குறுகினன் கந்த வெற்பு.

(இ - ள்.) இவ்வாறு திருப்பரங்குன்றத்தே சிலநாள் கழிந்த பின்னர் அம்மலையினின்றும் அகன்று விளங்குகின்ற வானுலகத்தைச் சீர்திருத்த இந்திரனை ஆளும்படி பணித்துப் பிறதேவரையும் அவரவர் நாட்டிற்சேரச் செலுத்திப் பின்னர் தன்னோடு குலாவிய பூதரும்வீரரும் புடைசூழக் கந்தமாதன மலையை எய்தினன்.

(வி - ம்.) வைப்பு - நாடு. கந்தவெற்பு - கந்தமாதனமலை.

(610)

 குவிமுலைக் களிநல் யானை கோட்டுமண் கொள்ளப் பட்ட
 சவிமணி மார்பிற் செவ்வே டையலோ டமர்ந்து சின்னாள்
 அவளையங் கிருவிக் கொண்ட வமரர்கள் வளத்தி னோடும்
 புவிபுகழ் தணிகைக் குன்றம் போந்துவீற் றிருந்தா னன்றே.

(இ - ள்.) தேவசேனையின் குவிந்த முலைகளாகிய யானைக்கோடு களானே குத்தப்பட்ட ஒளிமணியுடைய மார்பையுடையனாய் முருகவேள் அத்தேவசேனையோடு சிலநாள் உறைந்து பின்னர் அவளை அக்கந்தமாதனத்திலேயே இருக்கச்செய்து தான் சூரபதுமனிடத்திருந்து மீட்டுக்கொண்ட பெருஞ் செல்வத்தோடு உலகம் புகழ்தற்குக் காரணமான திருத்தணிகை மலையினை எய்தி வீற்றிருந்தருளினன்.

(வி - ம்.) கோட்டுமண்கொள்ளல் - கோட்டாற் குத்திமண்கோடல். இச்செயல் குத்துதல் என்னும் தொழிற்பொருட்டாய் நின்றது.

(611)

 பொருவில்வை குந்த மாதிப் புலவர்க ணகரந் தோறும்
 ஒருவுறி னமையா வாக வுற்றபல் வளங்க ளென்னும்
 திருவெலா நிறைந்த வாற்றாற் சீபரி பூர ணப்பேர்
 மருவிய தென்ப வேற்கை வள்ளலார் தணிகைக் குன்றம்.

(இ - ள்.) ஒப்பற்ற வைகுந்தமுதலிய தேவர்கள் நகரங்கடோறும் நீங்கின் அமையாதனவாக வந்தெய்திய பல்வகைப்பட்ட வளங்கள் என்கிற செல்வமெலாம் வந்துநிறைந்த காரணத்தால் வேலேந்திய கையையுடைய வள்ளற் பெருமான் வீற்றிருக்கும் திருத்தணிகைமலை சீபரிபூரணமலை என்னும் அழகிய பெயரை உடைத்தாயிற்று என்று சான்றோர் கூறாநிற்பர்.

(வி - ம்.) பொருவு - ஒப்பு. திரு - செல்வம். வேற்கைவள்ளல் - முருகன்.

(612)

 கந்தரந் தொறும்விண் ணோர்கள் வளமெலாங் கஞலுந் தோற்றம்
 எந்தைவேற் குமரப் புத்தே ளிருந்தரு டணிகைக் குன்றில்
 முந்துபல் வளத்தோ டொப்ப முதிர்தவம் புரிதல் போன்ற
 தந்தினல் வளத்தை யஞ்சிக் கரந்ததும் போன்ற தன்றே.