பெரிய மலையினின்றும் அரையோசனை தூரத்தே மேற்றிசையின்கண் ணமைந்ததொரு பொழிலையடைந்தனன். (வி - ம்.) பூத்த - பொலிந்த எனினுமாம். அணங்கு தெய்வப் பெண் ; திருமகள். தூ - தூய்மை. மால் - பெரிய. (2) | ஆங்கு மாநகர மொன்றுவி ளங்க | | வாக்கி யந்நகரி டத்தறல் பொங்கித் | | தீங்கு தீர்க்குமொரு தீர்த்தம கழ்ந்தத் | | தெள்ளு தீர்த்தமரு காகிய வைப்பின் | | ஓங்கி லிங்கமுறை யானிறு விப்போ | | தூறு தீஞ்சுவையின் போனக மற்றும் | | தாங்கி யன்பின்வழி பாடுபு ரிந்து | | தாளி ணைக்குளமொ ருக்கியி ருந்தான். |
(இ - ள்.) அவ்விடத்திலே பெரிய நகரமொன்றனை விளங்கும்படி படைத்து அந்நகரத்தின்கண் நீர்மிக்குத் தீவினையகற்றாநின்றதொரு தீர்த்தம் அகழ்ந்து அந்தத் தெளிந்த தீர்த்தக் கரைமருங்குள்ள ஓரிடத்தில் உயரிய அருட்குறி யொன்றனை நிறுத்தி மலர்களும் இனிமை ஊறாநின்ற சுவைமிக்க திருவமுதும் பிறவுமாகிய வழிபாட்டுப் பொருள்களை ஏந்தி அன்போடு வழிபாடியற்றி எம்பெருமான் திருவடிகளைப் பெறுதற் பொருட்டு நெஞ்சினை ஒருவழிப்படுத்து யோகத்திருந்தனன். (வி - ம்.) அறல் - நீர். தீங்கு - தீவினை. தீர்த்தம் - திருக்குளம். போது - மலர். போனகம் - உணவு. ஒருக்கி - ஒருவழிப்படுத்து. (3) | மருவு மாதவந கர்ப்பதி யாளு | | மாத வேசன்மகிழ் கூர்ந்தெதிர் தோன்றிப் | | பெருகு பத்திமைவி டாதவு ளத்துப் | | பிரச நக்கதுள வத்தொடை மார்பன் | | இருகை யுச்சியினி் ருத்திவ ணங்கி | | யெழுந்து சூழ்ந்துதுதி விண்டய னிற்பப் | | பொருவி லாதவடி மைத்தொழில் பூண்டோய் | | பொருப்பி வர்ந்துவிழை வெய்துதி யென்றான். |
(இ - ள்.) தான் எழுந்தருளிய அந்த மாதவநகரத்தின்கண் மாதவேசன் என்னுந் திருப்பெயர் கொண்டு வீற்றிருக்கும் பரமசிவன் திருமாலின் அன்பு வழிபாட்டிற்குள மகிழ்ச்சி மிகுந்து அவனெதிரே எழுந்தருளிய அளவிலே பெருகிய காதல் இடையறாத உள்ளத்தையுடைய தேன் விளங்கிய துளவமாலை யணிகின்ற மார்பையுடைய அத்திருமால் தன் இருகைகளையும் தலைமேற் குவித்துக் கும்பிட்டு வீழ்ந்து வணங்கி எழுந்து வாழ்த்திப் பக்கலிலே நிற்ப, அவனை நோக்கி ஒப்பற்ற அடிமைத் தொழிலை மேற்கொண்ட திருமாலே நீ விழைந்தவற்றை |