பக்கம் எண் :

878தணிகைப் புராணம்

இத்திருத்தணிகைமலை யுச்சியிற் சென்று பெறுவாயாக என்று திருவாய்
மலர்ந்தருளினான்.

(வி - ம்.) மாதவநகர் - திருமாலுண்டாக்கிய நகர். மாதவேசன் - திருமால் நிறுவிய அருட்குறியில் எழுந்தருளிய இறைவன். பத்திமை - காதல். பிரசம் - தேன். விண்டு - பாடி. பொருப்பு - திருத்தணிகை மலை.

(4)

 அளித்த நல்லருளை யுச்சியி னேற்றி
           யடிக ளின்னும்வர நல்குவ துண்டால்
 களித்த விந்நகர மென்றும்வி ளங்கக்
           காம ருங்குறியி தன்கணெஞ் ஞான்றும்
 தெளிக்கு நீயினிது வைகநி றைந்த
           தீர்த்த மாடியிவ ணிற்றொழு கின்றோர்
 நெளிக்கும் வல்வினையி னீங்கிவி ழைந்த
           நினைவும் வீடுமுற வாக்குவ தென்றான்.

(இ - ள்.) இறைவன் அளித்த திருவருளைத் தலைமேலே ஏற்றுக் கொண்டு பின்னரும் அத்திருமால் இறைவனை வணங்கி, பெருமான் எளியேற்கருளற் பாலது மற்றுமோர் வரமுளது அஃதாவது :- யான் மகிழ்ச்சியடைதற் கிடமான இம்மாதவ நகரம் எக்காலத்தும் நின்று நிலவித்திகழவும், யாவரும் விரும்புதற்குக் காரணமான இவ் வருட்குறியின்கண் உயிர்களை உணர்த்தும் பெருமான் எக்காலத்தும் இனிதே வீற்றிருக்கவும், நீர்நிரம்பிய இத்தீர்த்தத்தே ஆடி நின்னை இவ்விடத்தே தொழுவோர், நெளிதலையுடைய தீவினையினின்றும் நீங்கித் தாம் விரும்பிய கருத்துகளை எய்தி வீடுபெறவும் திருவருள் வழங்குதலாம் என்று இரந்தனன்.

(வி - ம்.) அடிகள் - விளி. இந்நகரம் - இம்மாதவநகரம். தெளிக்கும் - உயிர்கட்குணர்த்தும். நெளித்தல் - நெறிபிறழ்தல். வல்வினை - தீவினை.

(5)

 இரந்த வவ்வர மளித்தெனை யாளு
           மெம்பி ரான்குறியி னெய்திம றைந்தான்
 வரந்த ழைப்பவிளை மாதவ னீங்கி
           வயங்கு காவிவரை சூழ்ந்தெதிர் வைகி
 அரந்தை தீர்த்தருள்கு மாரதி ருத்த
           மாடி யாற்றுகட னாடிவெண் ணீறு
 பரந்த மார்பிலணி யக்கவ டங்கள்
           பாங்கு லாய்த்துவள வேறினன் வெற்பு.

(இ - ள்.) திருமால் வேண்டிய அவ்வரத்தினை அருளி எம்மையாளுடைய சிவபெருமான் திருவருட்குறியின்கட் சென்று மறைந்தருளினன். வரங்கள் பெருகும்படி ஆற்றிய பெரிய தவத்தினையுடைய